Don't Miss!
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தளபதி 65 அடுத்த அப்டேட் வந்தாச்சு...இதுக்காக தான் படக்குழு 'வெயிட்டிங்'
சென்னை : டாப் நடிகர்களின் படங்கள் பற்றிய அப்டேட்டிற்காக அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அஜித்தின் வலிமை படத்திற்கு பிறகு அதிகம் பேர் கேட்பது தளபதி 65 அப்டேட் தான்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 பற்றி ஏதாவது ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்ற அப்டேட் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து 2 ஹீரோயின்கள் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளதாக முன்பே தெரிவிக்கப்பட்டது.
இப்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக, சென்னை- பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோசில் பிரம்மாண்ட செட் தளபதி 65 படத்திற்காக அமைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 6 ம் தேதி நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்காக தான் படக்குழு காத்திருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிந்த பிறகு அல்லது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கோகுலம் ஸ்டூடியோசில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாகவும், அதை முடித்த பிறகு அனுமதி கிடைத்ததும், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.