2020 தீபாவளிக்கு ரஜினிகாந்த், அஜித்துடன் மோத தளபதி விஜய் மாஸ் திட்டம்.. இயக்குநர் யார் தெரியுமா?

சென்னை: தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

காலையிலிருந்து கிட்டத்தட்ட 66 ஆயிரம் ரசிகர்கள் ட்வீட் போட்டு #Thalapathy64FLday ஹாஷ்டேக்கை தொடர்ந்து முதலிடத்தில் வைத்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 'தளபதி 64' திரைப்படம் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையாக வெளியாகவுள்ள நிலையில், 2020 தீபாவளிக்கு 'தளபதி 65' படத்தை ரிலீஸ் செய்ய விஜய் மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

2020 தீபாவளி ரேஸ்

2020 தீபாவளி ரேஸ்

ரஜினிகாந்தின் தலைவர் 168 மற்றும் அஜித்தின் வலிமை 2020 தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், தளபதி 65 படமும் தீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வேகமாக உருவாகி வரும் தலைவர் 168 திரைப்படம் ஆயுத பூஜைக்கே வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

தல – தளபதி மோதல்

தல – தளபதி மோதல்

விஜய்யின் சர்கார் மற்றும் அஜித்தின் விஸ்வாசம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த மோதல் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. ஆனால், வலிமை மற்றும் தளபதி 65 மோதல் இந்த ஆண்டு இருந்தால் செம வெயிட்டாக இருக்கும் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

கோடை விடுமுறைக்கு தளபதி 64 வெளியாகவுள்ள நிலையில், தளபதி 65 திரைப்படத்தை அடுத்த அதிரடியாக தீபாவளிக்கு வெளியிட நடிகர் விஜய் திட்டமிட்டு வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

துப்பாக்கி 2?

துப்பாக்கி 2?

தர்பார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் துப்பாக்கி 2 வெளிவரும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், துப்பாக்கி 2? படம் எடுக்க முயன்றால், வரும் தீபாவளிக்கு தளபதி 65 வெளியாகுமா என்பது சந்தேகம் தான். அதனால், துப்பாக்கி 2வுக்கு முன்பாக ஒரு பக்கா மாஸ் படத்தை உருவாக்க விஜய் திட்டமிட்டு வருகிறார்.

மீண்டும் லோகேஷ் கனகராஜ்?

மீண்டும் லோகேஷ் கனகராஜ்?

இயக்குநர் அட்லிக்கு 3 படங்களை இயக்க வாய்ப்பளித்த தளபதி விஜய், லோகேஷ் கனகராஜுக்கே தளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளிக்க உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. ஏனென்றால், தீபாவளிக்குள் பக்காவான படத்தை இறக்கவேண்டும் என்றால், அது லோகேஷ் கனகராஜால் தான் முடியும் என்பதால், மீண்டும் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 மாத கால்ஷீட்

3 மாத கால்ஷீட்

தளபதி 65 படத்தை இயக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு 3 மாத கால்ஷீட் ஒதுக்கவும் நடிகர் விஜய் திட்டமிட்டு வருகிறார். தளபதி 65 படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 நடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வதந்தியா?

வதந்தியா?

கோலிவுட்டை சுற்றி வரும் இந்த தளபதி 65 குறித்த தகவல் வதந்தியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 64 ரிலீசுக்குப் பிறகே தளபதி 65 குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என்றும் தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: தளபதி 64
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X