தள்ளி போகும் தளபதி 65 படப்பிடிப்பு.... விஜய் எடுத்த முக்கிய முடிவு... சிறப்பான சம்பவம்!

சென்னை : தளபதி 65 படத்தின் முதல் ஷெட்யூலை ஜியார்ஜியாவில் முடித்துவிட்டு திரும்பியுள்ளது படக்குழு.

இரண்டாவது ஷெட்யூலுக்கான செட்கள் அமைக்கும் பணிகளில் தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் படம் குறித்த முக்கியமான முடிவை நடிகர் விஜய் தற்போது எடுத்துள்ளார்.

முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றது. இதையடுத்து கொரோனா சூழலிலும் தனது அடுத்த படமான தளபதி 65 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு முதல்கட்ட படப்பிடிப்பை ஜியார்ஜியாவில் முடித்துவிட்டு வந்துள்ளார் நடிகர் விஜய்.

மிகுந்த எதிர்பார்ப்பு

மிகுந்த எதிர்பார்ப்பு

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படமும் விஜய்யின் மற்ற படங்களை போலவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்கள் இந்த படத்திற்காகவும் விருப்பத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது ஷெட்யூல் மே மாதத்தில் துவங்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நடிகர் விஜய் முக்கிய முடிவு

நடிகர் விஜய் முக்கிய முடிவு

இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே இதற்கான செட்கள் அமைக்கும் பணிகளில் தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இதுகுறித்த முக்கிய முடிவை நடிகர் விஜய் எடுத்துள்ளார்.

நிறுத்த கூறிய நடிகர் விஜய்

நிறுத்த கூறிய நடிகர் விஜய்

செட்களை அமைக்கும் பணிகளை தற்போது நிறுத்தும்படி நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்காதவகையிலும் அவர்களது நலனை கருத்தில் கொண்டும் நடிகர் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் தற்காலிகமாக இந்த வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

2வது ஷெட்யூல் தள்ளி போகும்

2வது ஷெட்யூல் தள்ளி போகும்

இதனால் இரண்டாவது ஷெட்யூல் துவங்கும் பணிகள் தற்போது நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது ஷெட்யூலில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் படத்தின் வில்லனாக நடிக்கவுள்ள டைரக்டர் செல்வராகவன் ஆகியோர் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது படப்பிடிப்பு தள்ளி போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X