கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா? டிரெண்டாகும் #Thalapathy65

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய விவாதம் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்து இருந்தது.

அதனை தொடர்ந்து, ரொம்பவே அப்செட்டாகி உள்ளனர் விஜய் ரசிகர்கள். எப்படி இருந்தாலும், தளபதி 65 இன்னொரு வசூல் சாதனையை படைக்கும் என்றும் சந்தோஷமாக பதிவுகளை போட்டு வருகின்றனர்.

அண்ணாத்த ரிலீஸ்

அண்ணாத்த ரிலீஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலையில், ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் அறிவித்து இருப்பது ரஜினி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், விஜய் ரசிகர்களை அந்த அறிவிப்பு ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது. அதற்கு காரணம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி 65 திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்தது தான்.

தளபதி 66 எப்போ

தளபதி 66 எப்போ

இந்த ஆண்டு மாஸ்டர் பொங்கல் களைகட்டிய நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தான் தளபதி 66 படம் வெளியாகும் என ரசிகர்கள் ரிலீஸ் தேதி குறித்து சமூக வலைதளத்தில் விவாதித்து #Thalapathy65 என்ற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபாசுடன் மோதல்

பிரபாசுடன் மோதல்

தீபாவளிக்கு அண்ணாத்த படம் ரிலீசாகும் நிலையில், பொங்கலுக்கு தான் தளபதி 65 ரிலீசாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கே.ஜி.எஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், மிகப்பெரிய மோதல் திரையில் இருக்கும் என விஜய் மற்றும் பிரபாஸ் ரசிகர்கள் சண்டை போட்டு வருகின்றனர்.

பூவையாருக்கு வாய்ப்பு

பூவையாருக்கு வாய்ப்பு

பிகில், மாஸ்டர் படங்களை தொடர்ந்து குழந்தை நட்சத்திரம் பூவையார் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா இருவரில் ஒருவர் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

சின்ன படத்தையும் MASTER மாதிரி ஜெயிக்க வைங்க | VIJAY ANTONY SPEECH| KABADADAARI| FILMIBEAT TAMIL
சந்தோஷமும் சோகமும்

சந்தோஷமும் சோகமும்

பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படத்தை பார்த்து கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள் அடுத்த பொங்கல் வரை தளபதி 65 படத்துக்காக காத்திருக்க வேண்டுமா என்கிற சோகத்துடனும், மாஸ்டர் திரைப்படத்தை போலவே அடுத்த பொங்கலுக்கும் அசுர வசூலை குவிக்கும் தளபதி 65 என்ற சந்தோஷத்துடன் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X