கண்ணு பட போகுதுப்பா...தளபதி 66 டீம் ரெடி... யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

சென்னை : விஜய் அடுத்ததாக நடிக்கும் தளபதி 66 படம் பூஜையுடன் இன்று துவங்கி உள்ளது. படத்தில் யாரெல்லாம் உள்ளார்கள் என்ற முழு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இது விஜய்யின் முதல் பைலிங்குவல் படமாக உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தின் மூலம் டோலிவுட்டிலும் விஜய் என்ட்ரி ஆக உள்ளார்.

தளபதி 66 டீம்

தளபதி 66 டீம்

தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா பேனரில் தில் ராஜு தயாரிக்க உள்ளார். விஜய் படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 பூஜை

தளபதி 66 பூஜை

சென்னையில் உள்ள சென்னை ஸ்டூடியோஸில் இன்று பூஜை நடைபெற்றது. இதில் விஜய், டைரக்டர் வம்சி பைடபள்ளி, தில் ராஜு, சரத்குமார், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் ஷுட்டிங் பூஜையுடன் துவங்கி வைக்கப்பட்டது. பூஜையில் ராஷ்மிகா, விஜய்யின் ஜோடியை பார்த்து க்யூட்டான ஜோடி என அனைவரும் புகழ்ந்து தள்ளி உள்ளனர்.

வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள்

வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள்

தளபதி 66 படத்தில் விஜய், சரத்குமார், ராஷ்மிகா ஆகியோர் நடிப்பது உறுதியாகி விட்டது. தமன் இசையமைக்கிறார். தளபதி 66 படத்தின் தமிழ் வெர்சனுக்கு விவேக் டயலாக் எழுதுகிறார். மேக் அப் நாகராஜும், உடை வடிவமைப்பை தீபாளி நூரும் கவனிக்கிறார். பப்ளிசிட்டி டிசைன்களை கோபி பிரசன்னா, விஎஃப்எக்ஸ் பணிகளை யுகந்தர் செய்கிறார். கதை, திரைக்கதையை சாலமோன் மற்றும் ஹரி செய்கிறார்கள்.

இவர் தான் ஒளிப்பதிவா

இவர் தான் ஒளிப்பதிவா

ஒளிப்பதிவை கார்த்திக் பழனி கவனிக்கிறார். இவர் தான் பென்குயின், ஆதிபுருஷ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுவதால் இன்னொரு ஹீரோயினும் நடிக்க உள்ளாராம். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாம்.

செம அப்டேட்டா இருக்கே

செம அப்டேட்டா இருக்கே

படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் பாடல் காட்சிகளுடன் துவங்க உள்ளதாம். விரைவில் படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். ஹீரோயினை மாற்றுங்கள் என இதுவரை சொல்லி வந்தவர்கள், படத்தின் பூஜை அன்றே ராஷ்மிகா, விஜய்க்கு திருஷ்டி எடுத்தது உள்ளிட்ட காட்சிகளை பார்த்து விட்டு செம ஜோடியாக இருக்கு என கூற துவங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X