அப்படிப்போடு...தளபதி 66 ஃபர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...இனி எல்லாம் டபுள் தான்

சென்னை : விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை எப்போது வெளியிடலாம் என்ற படக்குழு முடிவு செய்து விட்டார்களாம். இனி தமிழ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக தர படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் பிஸியாக நடித்து வருகிறார். ஏப்ரல் 6 ம் தேதி சென்னையில் பூஜையை போட்டு, முதல் கட்ட ஷுட்டிங்கையும் சில நாட்களிலேயே எடுத்து முடித்து விட்டனர். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

யாரெல்லாம் நடிக்கிறார்கள்

யாரெல்லாம் நடிக்கிறார்கள்

படத்தை துவக்குவதற்கு முன் அடுத்தடுத்து பல அப்டேட்களை வெளியிட்டவர்கள், படத்தின் ஷுட்டிங் துவங்கிய பிறகு மொத்தமாக மெளனம் காத்து வருகிறது படக்குழு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அப்பாவாக சரத்குமார், அண்ணன்களில் ஒருவராக ஷாம் நடிப்பதாக மட்டுமே கூறி உள்ளார்கள். மற்ற நடிகர் நடிகைகள் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அப்போ எல்லாமே சும்மாவா

அப்போ எல்லாமே சும்மாவா

தளபதி 66 படத்தில் விஜய்க்கு சண்டை காட்சிகளை கிடையாது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் படம் என கூறப்பட்டு வந்த நிலையில், தளபதி 66 படத்தில் ஆக்ஷன், காமெடி, எமோஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்தும் உள்ளதாக தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். இந்த படத்தின் கதை அழுத்தமானது. அனைத்து தரப்பு ஆடியன்ஸ்களையும் கவரும் என நடிகர் சரத்குமாரும் கூறி உள்ளார்.

தளபதி 66 ரிலீஸ் எப்போ

தளபதி 66 ரிலீஸ் எப்போ

இரண்டாம் கட்ட ஷுட்டிங் சென்னையில் இந்த வாரம் துவங்கப்பட உள்ளது. இதற்காக அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஷுட்டிங்கை முடித்த பிறகு மீண்டும் சென்னைக்கு வந்து, அங்கு அமைக்கப்பட உள்ள செட்டில் பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தளபதி 66 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்டோபர் வரை படத்தின் ஷுட்டிங் நடக்கும், 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் பிளான் இதுவா

ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் பிளான் இதுவா

இதனால் தளபதி 66 படத்தில் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் செய்யும் தேதியை படக்குழு முடிவு செய்து விட்டதாம். அதாவது விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22 ம் தேதி தான் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட போகிறார்களாம். கடந்த ஆண்டு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தான் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் சிங்கிள் போஸ்டர்களை டைட்டிலுடன் வெளியிட்டது சன் பிக்சர்ஸ்.

Recommended Video

Beast team-க்கு Success Party தந்த Vijay |Filmibeat Tamil
 இனி எல்லாமே டபுள் தானா

இனி எல்லாமே டபுள் தானா

சமந்தா பிறந்த நாளன்று காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை ரிலீஸ் செய்தனர். கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை ஒரே நாளில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். டான் படக்குழுவினரும் ஆடியோ வெளியீட்டு நாளிலேயே டிரைலரையும் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தொடர்ந்து டபுள் ட்ரீட்டாக வழங்க படக்குழுக்கள் திட்டமிட்டுள்ளன. இதனால் இனி வரும் மற்ற ஸ்டார்களின் படங்களுக்கும் இப்படி தான் டபுளாக அறிவிப்பு வருமோ என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X