“தளபதி 66“ அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா.. அப்டேட்டை விட போஸ்டர் சூப்பரா இருக்கே!

சென்னை : தளபதி 66 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தளபதி 66 படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 22ம்தேதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி, தளபதி 66 படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 66

தளபதி 66

நடிகர் விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் புதியப் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, தில் ராஜூ தயாரிக்கிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு 'தளபதி 66' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ராஷ்மிகா

ராஷ்மிகா

இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக, பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அதேபோல் இந்தப் படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷாம் நடிக்கிறார். சீனியர் நடிகரான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குடும்ப பின்னணி படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்

முழு லிஸ்ட்

முழு லிஸ்ட்

தளபதி 66 திரைப்படத்தில், நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகர் ஷாம், நடிகை சங்கீதா, நடிகை ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றம் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பொங்கலுக்கு ரிலீஸ்

பொங்கலுக்கு ரிலீஸ்

பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது தளபதி 66 படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில், இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏராளமான லைக்குகள்

ஏராளமான லைக்குகள்

இந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு முடிவடைந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும், விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தரமான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் வெளியான சிறிது நேரத்தில் ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X