“தளபதி 66“ தரமான அப்டேட்.. பர்ஸ்ட் லுக், டைட்டில் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. குஷியில் ரசிகர்கள் !

சென்னை : தளபதி 66 திரைப்படம் குறித்த முக்கியமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Recommended Video

Thalapathy 66 படத்தின் First Look, Title Release எப்போ தெரியுமா? *Kollywood | Filmibeat Tamil

தளபதி 66 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 66

தளபதி 66

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 66' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில படங்கள் வெளியானதையடுத்து நடிகரின் தோற்றம் தெரியவந்தது.

படப்பிடிப்பு நிறுத்தம்

படப்பிடிப்பு நிறுத்தம்

'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடைபெற்றுவந்தது. இதனால், அந்த பகுதியில் இருக்கும் மக்களின் மூலமாக விஜய்யின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. இதனால், படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்றி தனியாக செட் அமைக்கப்பட்டு வருகிறது. செட் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இரு மொழியில்

இரு மொழியில்

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழியில் வெளியாக உள்ள இப்படத்திற்கு தெலுங்கில் வாரிசுடு என்றும், தமிழில் வாரிசு என்றும் பெயரிடப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சரத்குமார் விஜய்யின் தந்தையாகவும், ஷ்யாம் மற்றும் பிரகாஷ் ராஜ் விஜய்யின் சகோதரராகவும் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே விஜய் தனது தந்தை சரத்குமாரின் வாரிசாக படத்தில் நடிப்பதால் இப்படத்திற்கு வாரிசு என டைட்டில் வைத்திருப்பதாகவும் பலர் பேசி வருகின்றனர்.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

தளபதி 66 திரைப்படம் குடும்ப சென்டிமெண்ட் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இசையமைப்பாளர் தமன் முதன்முறையாக விஜய்யின் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.தெலுங்கு ஆடியன்சை கவரும் வகையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

டைட்டில், பர்ஸ்ட் லுக் ரிலீஸ்?

டைட்டில், பர்ஸ்ட் லுக் ரிலீஸ்?

இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஜூன் 21ந் தேதி மாலை சரியாக 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X