ஜுன் 21 ல் தளபதி 66 ஃபர்ஸ்ட்லுக்...அப்போ தளபதி 67 அறிவிப்பு?...வெறியேத்தும் மாஸ் தகவல்

சென்னை : விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டமொத்த கோலிவுட்டே தயாராகி வருகிறது. இதற்கான அப்டேட்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகி வருகின்றன.

Recommended Video

Thalapathy 66 படத்தின் First Look, Title Release எப்போ தெரியுமா? *Kollywood | Filmibeat Tamil

விஜய்யின் 48 வது பிறந்தநாள் ஜுன் 22 ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விஜய் ரசிகர்கள் பல நாட்களுக்கு முன்பிருந்தே தயாராக துவங்கி விட்டனர்.

வழக்கம் போல் விஜய்யின் பிறந்தநாளன்று பல உதவிகள் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் விஜய்யின் மக்கள் நல இயக்கம் சமீபத்தில் தேர்தலில்களில் பெற்ற வெற்றியையும் சேர்த்து கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பிரம்மாண்ட கட்அவுட்

பிரம்மாண்ட கட்அவுட்

திருவிழா போல் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள பல தியேட்டர்களில் விஜய் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படம் முதல் லேட்டஸ்ட் ரிலீசான பீஸ்ட் வரையிலான கெட்அப்களை தனித்தனி பிரம்மாண்ட கட்அவுட்களாக வைத்து அசத்தி உள்ளனர். இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகின்றன.

விஜய் பிறந்தநாள் சிடிபி

விஜய் பிறந்தநாள் சிடிபி

கோலிவுட்டில் விஜய்யின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு 48 பிரபலங்கள் ஒன்று சேர்ந்து, நேற்று காமன் டிபி ஒன்றை வெளியிட்டனர். தன்னை தானே செதுக்கியவன் என்ற தீமுடன் வெளியிடப்பட்ட இந்த டிபி செம டிரெண்டானது. இதனால் நேற்று முதலே விஜய்க்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூற துவங்கி விட்டனர்.

தளபதி 66 ஃபர்ஸ்ட்லுக்

தளபதி 66 ஃபர்ஸ்ட்லுக்

இதற்கிடையில் விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 66 பட டீம், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இன்று, தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜுன் 21 ம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியிடப்படும் என, He is Returning என்ற கேப்ஷனுடன், விஜய் கருப்பு உடையில் திரும்பி நிற்பது போன்ற போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தளபதி 66 டைட்டில் எப்போ

தளபதி 66 டைட்டில் எப்போ

முதல் நாளே ஃபர்ஸ்ட்லுக் வெளியிட போகிறார்கள் என்றால், விஜய் பிறந்தநாளன்று எதுவும் கிடையாதா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதற்கும் சஸ்பென்ஸ் ட்ரீட் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஜுன் 21 அன்று மாலையும், சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தளபதி 66 படத்தின் செகண்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட போகிறார்களாம்.

அப்போ தளபதி 67 அறிவிப்பு

அப்போ தளபதி 67 அறிவிப்பு

தளபதி 66 ஃபர்ஸ்ட் லுக் மட்டுமல்ல தளபதி 67 படத்தின் அறிவிப்பும் விஜய் பிறந்தநாளன்று வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் லேட்டஸ்ட் தகவலின் படி தளபதி 66 படத்தின் அப்டேட்டை ஜுன் 21 ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவதை போல், தளபதி 67 படத்தின் அப்டேட்டை ஜுன் 22 ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட போகிறார்களாம்.

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

இதுவரை வெளியான தகவல்களின் படி தளபதி 66, தளபதி 67 படங்களின் அப்டேட்கள் விஜய் பிறந்தநாளில் டபுள் ட்ரீட்டாக வர உள்ளது. இது தவிர இன்னும் என்னவெல்லாம் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X