என்னங்க சொல்றீங்க...அதுக்குள்ள தளபதி 66 ஷுட்டிங் முடிஞ்சுடுச்சா ?

சென்னை : விஜய்யின் தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் கடந்த வாரம் துவங்கப்பட்ட நிலையில், இதை முடித்து விட்டு அடுத்த கட்ட வேலைகளில் படக்குழு கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டைரக்டர் வம்சி பைடபள்ளி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் விஜய்யை வைத்து தளபதி 66 படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு இந்த படத்தை இயக்கி வருகிறார் தமான் இசையமைக்கிறார்.

லேட்டஸ்ட் வரவு இவர் தானா

லேட்டஸ்ட் வரவு இவர் தானா

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விஜய்யின் அப்பா ரோலில் சரத்குமாரும், அண்ணன்களில் ஒருவராக ஷாமும் நடிக்கிறார்கள் என சொல்லப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து யோகிபாபு, பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோரும் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. லேட்டஸ்டாக நடிகை ஜெயசுதாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும், இவர் விஜய்க்கு அம்மாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ரிலீஸ் தேதியும் சொல்லிட்டாங்களே

ரிலீஸ் தேதியும் சொல்லிட்டாங்களே

தளபதி 66 படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அப்டேட் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டருடன் தளபதி 66 படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கே ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த ஆண்டு பொங்கல் என கூறி உள்ளனர். அது மட்டுமில்லாமல் படம் பாதி முடிவடைவதற்கு முன்பே இப்போதே ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்து விட்டார்களே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இரண்டாம் கட்ட ஷுட்டிங்

இரண்டாம் கட்ட ஷுட்டிங்

தளபதி 66 படத்தின் பூஜை ஏப்ரல் 6 ம் தேதி சென்னையில் நடத்தப்பட்டு, அதைத் தொடர்ந்து மிக சில நாட்களே சென்னையில் நடத்தப்பட்ட முதல் கட்ட ஷுட்டிங்கில் சிறிய அளவில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் கடந்த வாரம் துவங்கப்பட்டது. இரண்டாம் கட்ட ஷுட்டிங்கில் தான் ராஷ்மிகா உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

என்னது ஷுட்டிங் முடிஞ்சிடுச்சா

என்னது ஷுட்டிங் முடிஞ்சிடுச்சா

ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் ஷுட்டிங் நடத்தப்பட்டு வந்தது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் இம்மாத இறுதி வரை தொடரும். மொத்தமாக தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, இரண்டாம் கட்ட ஷுட்டிங்கும் முடிந்து விட்டதாம். இன்று முதல் மூன்றாம் கட்ட ஷுட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறதாம்.

Recommended Video

இந்த மாதிரி படத்தை புது டைரக்டர் எப்படி Handle பண்ணுவாரு னு யோசிச்சேன் |Ranga| Sibiraj
என்ன சொல்றீங்க...அதுக்குள்ளயா

என்ன சொல்றீங்க...அதுக்குள்ளயா

இந்த தகவலால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். இப்போது தானே இரண்டாம் கட்ட ஷுட்டிங் துவங்கியதாக கூறினார்கள். அதற்குள் முடித்து விட்டார்களா. ஏன் மிக சில நாட்கள் மட்டுமே ஷுட்டிங்கை நடத்தி வருகிறார்கள். இரண்டாம் கட்ட ஷுட்டிங் முடிந்ததே தெரியவில்லை. அதற்குள் மூன்றாம் கட்ட ஷுட்டிங் ஆரம்பித்து விட்டார்களா என அனைவரும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X