“தளபதி 66“ களமிறங்கும் பாலிவுட் மாஸ் … இது வில்லத்தனமான நியூஸ்!

சென்னை : தளபதி 66 திரைப்படத்தில் மாஸான வில்லன் ஒருவரை களமிறக்க தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தளபதி 66

தளபதி 66

விஜய் அடுத்து நடிக்கும் தளபதி 66வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்

தற்போது, தளபதி 66படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி ஏற்கனவே கூறியது போல், தளபதி 66 எமோஷனல் பொழுதுபோக்கு படமாக இருக்கும். ஆகையால் படத்திற்கு ஒரு வலுவான வில்லன் தேவை. எனவே, இப்படத்தில் வில்லனாக நடிக்க விவேக் ஓபராயை தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

இந்த திரைப்படத்தில் விஜய், இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிப்பதாகவும், தமன் இசையமைப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தத் திரைப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிக்கிறது. இது அவர்களின் முதல் நேரடி தமிழ் திரைப்படம் இதுவாகும்.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்தால் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இப்படம் ரிலீசாகும் என்றும், ஒருவேளை கொரோனா காரணமாக படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டால் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X