என்னது தளபதி 66ல் இரண்டாவது ஹீரோயினும் இருக்காங்களா... யாரு அந்த அதிர்ஷ்டசாலி!

சென்னை : நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்தில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை திரும்பியுள்ளார் நடிகர் விஜய்.

இந்தப் படத்தின் டைட்டில் பாடலை பிரபல நடன இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா அமைத்துள்ளார்.

விஜய்யின் பீஸ்ட்

விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தப் போதிலும் வசூல்ரீதியாக படம் மிகச்சிறந்த வெற்றியை கொடுத்துள்ளது. இதனை படத்தின் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தளபதி 66 படம்

தளபதி 66 படம்

இந்தப் படம் 200 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்த நிலையில், படக்குழுவினருக்கு சக்சஸ் பார்ட்டி கொடுத்து அசத்தினார் விஜய். தொடர்ந்து தற்போது விஜய் 66 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார். இவர் தமிழில் தோழா என்ற வெற்றிப்படத்தை கொடுத்தவர்.

பிரபுதேவாவுடன் விஜய்

பிரபுதேவாவுடன் விஜய்

சென்னையில் பூஜையுடன் துவங்கிய தளபதி 66 படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்திலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் ஐதராபாத்தில் நடத்தப்பட்ட நிலையில், படத்தின் டைட்டில் பாடலை பிரபல நடன இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா அமைத்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த நடனங்கள்

ரசிகர்களை கவர்ந்த நடனங்கள்

13 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் விஜய் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவர் இருவரும் இணைந்து அமைக்கப்பட்ட பாடல்கள் நடனத்தில் மிகவும் ஹிட்டாகி ரசிகர்களை கவர்ந்தவை. முன்னதாக தாம் தக்க கூத்து என்ற பாடலில் இருவரும் இணைந்து மிரட்டியிருப்பார்கள்.

சென்னை திரும்பிய விஜய்

சென்னை திரும்பிய விஜய்

நடனத்தில் எப்போதுமே பெஸ்டாக இருப்பவர் விஜய், அவருக்கு கூட்டாக பிரபு தேவா இணைந்தால் அந்த காம்பினேஷன் குறித்து கூற வேண்டியதில்லை. இதனிடையே ஐதராபாத்தில் சூட்டிங்கை முடித்துவிட்டு விஜய் தற்போது சென்னை திரும்பியுள்ளார். இதன் விமானநிலைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சூட்டிங்கில் இணைந்த ராஷ்மிகா

சூட்டிங்கில் இணைந்த ராஷ்மிகா

இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவும் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இதுமட்டுமின்றி படத்தில் இரண்டாவது நாயகி கேரக்டரும் உள்ளதாம். இந்த கேரக்டரில் நடிக்கவுள்ள ஹீரோயின் குறித்து அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது நாயகி

இரண்டாவது நாயகி

இதனிடையே இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் இதற்காகவே இரண்டாவது நாயகி இந்தப் படத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தக் கேரக்டரில் பூஜா ஹெக்டே நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த வாரத்தில் அறிவிப்பு

அடுத்த வாரத்தில் அறிவிப்பு

எதுவாக இருந்தாலும் இந்த அறிவிப்பு வெளியாக இன்னும் ஒரு வாரங்கள் ரசிகர்கள் காத்திருக்க வேண்டும். இதனிடையே, படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக்

விஜய் பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக்

இதனிடையே விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் வரும் 21ம் தேதி மாலையில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளையொட்டியே வெளியானது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X