தளபதி 66ல விஜய்யோட இன்னொரு லுக் இதுதானா? பிரகாஷ் ராஜ் ஷேர் பண்ண லேட்டஸ்ட் போட்டோ!

சென்னை: கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு என பல படங்களில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்திய பிரகாஷ் ராஜ் மீண்டும் விஜய்யுடன் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை மாஸாகவும் கிளாஸாகவும் பண்ணப் போகிறேன் என சொன்னதில் இருந்தே அந்த படத்தின் ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.

இந்நிலையில், தளபதி 66 படத்தை எப்படி விட்டு விடுவது என பிரகாஷ் ராஜ் போட்டுள்ள லேட்டஸ்ட் ட்வீட் விஜய் ரசிகர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறது.

தெலங்கானா முதல்வருடன் சந்திப்பு

தெலங்கானா முதல்வருடன் சந்திப்பு

ஒயிட் ஷர்ட்டில் செம ஸ்டைலாகவும் ஹேண்ட்ஸம் ஆகவும் சமீபத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை நடிகர் விஜய் சந்தித்தார். தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இந்த கெட்டப்பில் தான் அவர் நடிக்கப் போகிறார் என்பதை கன்ஃபார்ம் பண்ணி விட்டனர்.

டபுள் ரோல்

டபுள் ரோல்

தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 படத்தில் சரத்குமார், பிரபு, ராஷ்மிகா மந்தனா, சங்கீதா, யோகி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹாய் செல்லம்

ஹாய் செல்லம்

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் புதிய புகைப்படத்தை ஷேர் செய்து, ஹாய் செல்லம்.. வி ஆர் பேக் என தளபதி 66 ஹாஷ்டேக்கை போட்டு டிரெண்டாக்கி உள்ளார். பிரகாஷ் ராஜ் உடன் விஜய் இருக்கும் புகைப்படத்தில் அவரது ஹேர் ஸ்டைல் மற்றும் லுக் சற்றே மாறுபட்டு காணப்படும் நிலையில், இதுதான் செகண்ட் லுக்காக என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கில்லி மேஜிக்

கில்லி மேஜிக்

ஹாய் செல்லம் என பிரகாஷ் ராஜ் ட்வீட் போட்டிருக்கும் நிலையில், மீண்டும் கில்லி மேஜிக்கை கொண்டு வரும் முயற்சியில் தான் இயக்குநர் வம்சி இறங்கி உள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், கில்லி, சிவகாசி, வில்லு மற்றும் போக்கிரி படங்களில் விஜய்க்கு வில்லனாக நடித்தது போல இந்த படத்திலும் பிரகாஷ் ராஜ் தான் வில்லன் என ரசிகர்கள் கன்ஃபார்ம் பண்ணி வருகின்றனர். ஜகபதி பாபுவும் இல்லாத நிலையில், பிரகாஷ் ராஜ் வில்லனாக நடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X