Don't Miss!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்படி ஒரு கதையை கேட்டு 20 வருஷமாச்சு… ஹேப்பியான விஜய்... தளபதி 66 அப்டேட் !
சென்னை : தளபதி 66 திரைப்படம் குறித்த அசத்தலான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய பொருட்செலவில் இத்திரைப்படம் உருவாக உள்ளது.
எரோட்டோமேனியா என்ற வித்தியாசமான மன நோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

பீஸ்ட்
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

தளபதி 66
பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து தளபதியின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். இப்படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவிருக்கிறார் விஜய். தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய பொருட்செலவில் இத்திரைப்படம் உருவாக உள்ளது.

இசையமைப்பாளர் தமன்
தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் இணைந்து தளபதி 66 படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இசையமைப்பாளராக தமனும், நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுவரைக்கும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

நல்ல கதை
இந்த நிலையில், ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள தயாரிப்பாளர் தில் ராஜூ, தளபதி 66 படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்றும் கடந்த 20 வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையை கேட்டியிருக்கிறேன் என நடிகர் விஜய் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

ரிலீஸ் எப்போ
தளபதி 66 படப்பிடிப்பு முடிந்த பிறகு, அந்த நேரத்தில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பதை பொறுத்தே, தீபாவளி அல்லது பொங்கலுக்கு திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தில் ராஜூ கூறினார். தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அப்டேட்டால் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.