தளபதி 67 அறிவிப்பு இந்த நாளிலா...அப்படி என்ன ஸ்பெஷல் இந்த தேதியில்?

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமாக விக்ரம் படத்தை கொடுத்துள்ளார்.

கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சுர்யா நடித்த விக்ரம் படம் ரிலீசாகி 40 நாட்களில் 500 கோடி வசுலை நெருங்கி உள்ளது. ரஜினியின் 2.ஓ படத்திற்கு பிறகு அதிக வசுலை பெற்ற தமிழ் படம் என்ற பெருமையை விக்ரம் பெற்றுள்ளது.

பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் வசுல் சாதனையையே முறியடித்த கேஜிஎஃப் படத்தின் டைரக்டர் பிரசாந்த் நீல், லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை எடுத்துள்ள விதத்தை மனம் திறந்து பாராட்டி உள்ளார். இதனால் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்

விக்ரம் 3, கைதி 2, தளபதி 67 என லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இவற்றில் லோகேஷ் கனகராஜ் எதை முதலில் இயக்க போகிறார் என்ற ஆர்வம் அனைவரிடமும் ஏற்பட்டது. தான் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை தான் இயக்க போவதாக லோகேஷ் சமீபத்தில் அறிவித்தார்.

ரசிகர்களை இப்படியா ஏமாத்துவீங்க

ரசிகர்களை இப்படியா ஏமாத்துவீங்க

ஆனால் இதுவரை தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. விஜய் பிறந்தநாளான ஜுன் 22 ம் தேதி தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் தளபதி 67 படத்தின் அறிவிப்பு வரவில்லை. அதற்கு பதில் விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தின் டைட்டில் மற்றும் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதனால் ரசிகர்கள் அப்செட் ஆகினர்.

தளபதி 67 அறிவிப்பில் சென்டிமென்டா

தளபதி 67 அறிவிப்பில் சென்டிமென்டா

விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வந்தாலும், ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்னவோ தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு மற்றும் அப்டேட் தான். இது எப்போது வரும், என்ன பிளான் வைத்துள்ளார்கள் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் லேட்டஸ்ட் தகவலின், இதற்காக சிறப்பான சென்டிமென்ட் நாளே ஒன்றை தேர்வு செய்து வைத்துள்ளார்களாம்.

அப்படி என்ன ஸ்பெஷல் அந்த தேதியில்

அப்படி என்ன ஸ்பெஷல் அந்த தேதியில்

ஆகஸ்ட் 24 ம் தேதி தான் தளபதி 67 படத்தின் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஆகஸ்ட் 24 ல் அப்படி என்ன ஸ்பெஷல் என விசாரித்தால், இதே தேதியில் தான் 2019 ம் ஆண்டு மாஸ்டர் படத்தின் டைட்டிலை வெளியிட்டார்களாம். மாஸ்டர் படம் தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட சமயத்திலேயே 100 கோடி வசுல் செய்த படம். அதனால் அதே போல் தளபதி 67 படமும் மாஸ் ஹிட்டாக வேண்டும் என்ற சென்டிமென்ட் காரணமாக தான் தளபதி 67 படத்தின் அறிவிப்பை தள்ளிப் போட்டு வருகிறார்களாம்.

Recommended Video

Kolai | கையில் சிகரெட்டுடன் Radhika...வில்லி Poster கிளப்பிய சர்ச்சை *Kollywood | Filmibeat Tamil
மீண்டும் இணையும் மாஸ்டர் டீம்

மீண்டும் இணையும் மாஸ்டர் டீம்

தளபதி 67 படத்தை மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமார் தான் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரில் தயாரிக்க உள்ளாராம்.மாஸ்டர் பட டீம் மீண்டும் இணையும் இந்த படத்திலும் மாஸ்டர் பட சென்டிமென்ட் ஒர்க்அவுட் ஆகும் என அனைவரும் நம்புகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X