தளபதி 67: விஜய்க்காக ஹாலிவுட்டில் இருந்து ஒரு ஸ்பெஷல்… ரூட்டை மாற்றும் லோகேஷ் கனகராஜ்?

சென்னை: பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67ல் நடிக்க ரெடியாகி வருகிறார் விஜய்.

இதனால் தளபதி 67 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்தப் படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் – லோகேஷ் காம்போ

விஜய் – லோகேஷ் காம்போ

விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம், பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, வம்ஷி பைடிபள்ளி இந்தப் படத்தை இயக்குகிறார். வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைகிறார் விஜய். தற்காலிகமாக 'தளபதி 67' என்ற டைட்டிலில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்?

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்?

மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய விஜய் - லோகேஷ் கூட்டணி, தளபதி 67ல் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. கைதியில் இருந்து விக்ரம் படத்திற்கான லீட் எடுத்த லோகேஷ், தளபதி 67 படத்தையும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. அதனால், தளபதி 67 படத்தில் கமல், சூர்யா, கார்த்தி ஆகியோரும் கேமியோ ரோலில் நடிக்கலாம் என தகவல் வெளியானது. அதேபோல், தளபதி 67 படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஹாலிவுட்டில் இருந்து தளபதி 67

ஹாலிவுட்டில் இருந்து தளபதி 67

இதனிடையே தளபதி 67 குறித்து இன்னொரு புதிய தகவலும் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி இந்தப் படம், ஹாலிவுட்டில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற படத்தின் ரீமேக்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் உரிமையை ஹாலிவுட்டில் இருந்து லோகேஷ் அதிகாரப்பூர்வமாக வாங்கிவிட்டதாகவும், அதுதான் தளபதி 67 படமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் படங்களில் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் சாயல் இருப்பதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்தன.

முடிவை மாற்றும் லோகேஷ்?

முடிவை மாற்றும் லோகேஷ்?

தளபதி 67-ல் விஜய் மும்பை கேங்ஸ்டராக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட் ஒர்க் அவுட் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் ரீமேக்காக இருக்கும் என்ற தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தின் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு அதை லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் லோகேஷ் பயன்படுத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X