Don't Miss!
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த பக்கம் மிஷ்கின்.. அந்த பக்கம் கெளதம் மேனன்.. பறக்கும் தளபதி 67 மீம்கள்.. அந்த 7 சாமுராய்!
சென்னை: வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 திரைப்படத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டனர்.
வாரிசு படம் வெளியாகி 10 நாட்களில் தளபதி 67 அப்டேட் வரும் என லோகேஷ் கனகராஜ் சொன்ன நிலையில், 10 நாள் ஆகிடுச்சு எங்கே இன்னும் அப்டேட் வரல என்றும் தளபதி 67 படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என ஏகப்பட்ட மீம்கள் பறக்கின்றன.
தளபதி 67 படத்தில் மிஷ்கின் மற்றும் கெளதம் மேனன் நடித்து வரும் நிலையில், பிரேக் நேரத்தில் ஆளுக்கொரு கதை சொல்லி விஜய்யை டென்ஷன் ஆக்கிடுவாங்க என கலாய்த்து வெளியாகும் மீம்கள் டிரெண்டாகி வருகின்றன.
வாரிசு
சக்சஸ்
மீட்…படக்குழுவினருடன்
கேக்
வெட்டி
கொண்டாடிய
விஜய்!

ஜனனி ஒரே சீன்ல காலி
தளபதி 67 படத்தில் விஜய்யின் மகளாக பிக் பாஸ் ஜனனி நடிக்கப் போகிறார் என்றும் அவரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தலை வேறு முண்டம் வேறு என ஆக்கி விடுவார் என மீம் போட்டு இப்போவே பிக் பாஸ் ஜனனியை பயமுறுத்தி வருகின்றனர் மீம் கிரியேட்டர்கள். விக்ரம் படத்தில் காயத்ரியின் தலையை வெட்டியதில் இருந்தே இப்படி மீம்கள் குவிந்து வருகின்றன.

அப்டேட் வரல
வாரிசு படம் வெளியாவதற்கு முன்பாகவே சத்தமே இல்லாமல் தளபதி 67 படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், வாரிசு படம் வெளியான நிலையில், இப்போவாவது அப்டேட் கொடுப்பீங்களா என இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் ரசிகர்கள் கேட்க இன்னும் 10 நாளில் கன்ஃபார்மா அப்டேட் வரும் என்றார். இந்நிலையில், 10 நாள் ஆகிடுச்சு படம் ரிலீஸாகி இன்னும் அப்டேட் வரல என மீம் போட்டு லோகேஷ் கனகராஜை கலாய்த்து வருகின்றனர். ஜனவரி 26ம் தேதி தளபதி 67 அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டர்டேக்கரை இறக்குவோம்
இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இந்தியாவின் சிறந்த நடிகர்கள் ஒவ்வொரு ஸ்டேட்டாக தேடி கண்டுபிடித்து இறக்கி வரும் நிலையில், தளபதி 67 படத்தின் கிளைமேக்ஸில் நாங்க திடீரென அண்டர்டேக்கரையே இறக்குவோம் என லோகேஷ் கனகராஜ் சொல்வது போல கோபி சுதாகர் பரிதாபங்கள் மீமை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

மிஷ்கின் கெளதம் மேனன் நடுவில்
தளபதி 67 படத்தில் மிஷ்கின் மற்றும் கெளதம் மேனன் என இரு சீனியர் இயக்குநர்கள் நடித்து வரும் நிலையில், பிரேக் நேரத்தில் இருவரும் விஜய்க்கு அருகே உட்கார்ந்து கொண்டு ஆளுக்கொரு கதையை சொல்லி டென்ஷன் ஆக்கிடுவாங்க என்றும் மிஷ்கின் அந்த செவன் சமுராய் படத்தை பார்த்தீங்களா விஜய் என தனது உலக சினிமா அறிவை வெளிப்படுத்தி நோகடித்து விடுவார் என கிண்டல் செய்து வருகின்றனர்.

படமெடுக்க விடுங்க
தளபதி 67 படத்தின் அப்டேட் கேட்டும் அந்த படம் எல்சியூவா இல்லையா என்றும் ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்து லோகேஷ் கனகராஜை டென்ஷன் ஆக்கப் போறாங்க விஜய் ரசிகர்கள் என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். நிம்மதியா படம் எடுக்க விடுங்கடா என்னைய என அவர் புலம்புவது போன்ற மீமும் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.