Thalapathy 67: தளபதி 67 கவுன்டவுன்... லியோ டீம் கொடுத்த சர்ப்ரைஸ் ட்ரீட்... அடுத்த அப்டேட் ரெடி!
சென்னை: லோகேஷ் இயக்கத்தில் விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது லியோ.
மாஸ்டருக்குப் பின்னர் விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது.
லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான கவுண்டவுனை தொடங்கியது லியோ டீம். அதாவது '67 Days For Thalapathy 67' என்ற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது.

67 Days For Thalapathy 67: விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ளது லியோ. ஆரம்பத்தில் தளபதி 67 என்ற டைட்டிலில் தொடங்கிய இந்தப் படத்திற்கு லியோ என டைட்டில் அறிவிக்கப்பட்டது. டைட்டில் டீசருடன் வெளியான இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷுடன் விஜய் இரண்டாவது முறையாக லியோவில் இணைந்ததால் தளபதி 67 மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது.
மாஸ்டரை தொடர்ந்து லியோ படத்தையும் 7 ஸ்க்ரீன்ஸ் லலித் குமார் தயாரித்து வருகிறார். விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தாண்டு பிப்ரவரியில் படப்பிடிப்பைத் தொடங்கிய லோகேஷ், 125 நாட்களில் மொத்த ஷூட்டிங்கையும் முடித்துவிட்டார்.
இதனையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாட்டிலும் படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது. அதன்படி லியோ ஆடியோ லான்ச் அக்டோபர் 6ம் தேதி மலேஷியாவில் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மலேஷியா சென்றுள்ள தயாரிப்பாளர் லலித் குமார் விரைவில் சென்னை வந்ததும் அபிஸியலாக அப்டேட் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் 67 நாட்களே உள்ளதால், 'தளபதி 67' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. '67 Days For Thalapathy 67' என்ற கவுண்டவுன் ஹேஷ்டேக்குடன் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதனால், இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நாளை (ஆக.15) ஆக்ஷன் கிங் அர்ஜுனின் கேரக்டருக்கான க்ளிம்ப்ஸ் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னொரு பக்கம் லியோ படத்தை IMAX தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்ய லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். அதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரஜினியின் ஜெயிலர் ஃபீவர் குறைந்து வருவதால், இனி லியோ தான் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக் என விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் ஜெயிலர் வசூலை விடவும் பாக்ஸ் ஆபிஸில் லியோ தான் மாஸ் காட்டும் எனவும் பந்தயம் கட்டி வருவது டிவிட்டரை சூடாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











