Thalapathy 68: விஜய்-அட்லீ சம்பளம் மட்டும் இத்தனை கோடியா..? தளபதி 68ல் லைஃப்டைம் செட்டில்மெண்ட்!
சென்னை: லியோ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 68 குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தப் படத்தை விஜய்யின் ஃபேவரைட்டான அட்லீ இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், தளபதி 68 திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம்.
இந்நிலையில், தளபதி 68 படத்திற்காக விஜய், அட்லீ இருவருக்குமான சம்பளம் குறித்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68: விஜய் - அட்லீ சம்பளம்
விஜய்யின் லியோ ஷூட்டிங் இன்னும் 60 நாட்கள் மட்டுமே நடைபெறும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். ஏற்கனவே காஷ்மீரில் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்ட லோகேஷ், மீதியிருக்கும் காட்சிகளை சென்னை, ஹைதாராபாத் பகுதிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இந்தப் பரபரப்புக்கு நடுவில், விஜய்யின் தளபதி 68 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
வாரிசு வெளியான உடனே லியோ ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். அதேபோல் தனது அடுத்த படத்திற்கும் ரெடியாகிவிட்டாராம். அதன்படி அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியானதும், தளபதி 68 படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்களாம். மேலும், இந்தப் படத்தை அட்லீ இயக்கவுள்ளதும், படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளதும் உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் என ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து மிரட்டியுள்ளது விஜய் - அட்லீ காம்போ. அதனால் தளபதி 68 படத்தில் இவர்கள் இணைந்தால், அதுவும் தரமான வசூல் வேட்டை நடத்தும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் தளபதி 68 பிகில் படத்தின் ராயப்பன் கேரக்டரை பின்னணியாக வைத்து உருவாகவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தளபதி 68 கதையை அட்லீ ரெடி செய்து வரும் நிலையில், இந்தப் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் ஆர்வம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம், 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனங்களும் தளபதி 68 படத்தை தயாரிக்க போட்டிப் போட்டு வருகிறதாம். இதனால், விஜய், அட்லீ சம்பளத்தை லைஃப் டைம் செட்டில்மெண்டாக கொடுக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாம்.
அதன்படி, விஜய் - அட்லீ இருவருக்கும் சேர்த்து மொத்தம் 200 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். விஜய்க்கு 130 முதல் 140 கோடி வரையும், மீதமிருப்பது இயக்குநர் அட்லீக்கு என சொல்லப்படுகிறது. இதுவரை 125 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த விஜய், இனி அடுத்தக்கட்டத்திற்கு செல்வார் என தெரிகிறது. அதேபோல், அட்லீயின் சம்பளம் இருமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பாலிவுட்டில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஜவான் வெளியானதும் உடனடியாக தளபதி 68 ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை பார்க்கவுள்ளாராம் அட்லீ. அதனால் விரைவில் தளபதி 68 படம் குறித்த அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











