Thalapathy 68: விஜய்யுடன் இணையும் டோலிவுட் ஹீரோயின்... தளபதி 68 லேட்டஸ்ட் அப்டேட் இதுதானா?

சென்னை: விஜய்யின் தளபதி 68 திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் இணையும் டோலிவுட் பிரபலம்

விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

Thalapathy 68: Actress Malavika Sharma On Board Thalapathy 68 for Important Role

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் தளபதி 68 படத்தில், விஜய்யுடன் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் இவானாவும் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் திடீரென தளபதி 68ல் இருந்து விலகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனிடையே விஜய்யுடன் டோலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. நெலா டிக்கெட் என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான மாளவிகா ஷர்மா தான் அது. சிவப்பு, ஹரோம் ஹரா போன்ற தெலுங்குப் படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் காதலுடன் காபி படத்தில் அறிமுகமாகி இருந்தார். இந்நிலையில் தற்போது தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறாராம் மாளவிகா ஷர்மா.

தளபதி 68ல் மாளவிகா ஷர்மாவின் கேரக்டர் மிக முக்கியமானது என்றும், அதனால் அவர் கமிட்டானது குறித்து எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை என சொல்லப்படுகிறது. இதனிடையே தளபதி 68 சயின்ஸ் பிக்‌ஷன் ஜானர் இல்லை எனவும், அது பக்கா கமர்சியலாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் தளபதி 68 அப்டேட்கள் ஜனவரி 1ம் தேதி நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தளபதி 68 டைட்டில், விஜய் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X