ஒட்டகத்த கட்டிக்கோ.. கெட்டியாக ஒட்டிக்கோ.. பாலைவனத்தில் பாடாய்ப்படுத்தும் தளபதி 68 பட ஹீரோயின்!
சென்னை: நடிகை மீனாக்ஷி சவுத்ரி துபாய் பாலைவனத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விஜய் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி உள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி 68 படத்தில் நடிக்க தாய்லாந்து சென்றுள்ள நிலையில், ஹீரோயின் மீனாக்ஷி சவுத்ரி துபாயில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

அங்கே ஒட்டகம் அருகே இவர் நடத்திய கலர்ஃபுல் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
அடுத்த தலைவி: லியோ படம் வரை விஜய் ரசிகர்களுக்கு த்ரிஷா தலைவியாக இருந்து வந்த நிலையில், அடுத்து தளபதி 68 படத்தில் மீனாக்ஷி சவுத்ரி தான் ஹீரோயின் என்பது தெரிந்த உடனே விஜய் ரசிகர்கள் அதிகளவில் ஃபாலோ செய்து வரும் நிலையில், 8 லட்சத்தில் இருந்து அதிரடியாக 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.

துபாயில் ஹபிபி வைப்ஸ்: தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்து வந்த மீனாக்ஷி சவுத்ரி தமிழில் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடித்து வருகிறார் மீனாக்ஷி சவுத்ரி. இந்நிலையில், துபாயில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளையும் விஜய் ரசிகர்களின் கமெண்ட்டுகளையும் அள்ளி உள்ளார்.

ஒட்டகத்துடன் ஒய்யாரமாக: பாலைவனத்தில் ஒட்டகம் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மீனாக்ஷி சவுத்ரி வெளியிட்ட நிலையில், தளபதி 68 படத்தின் அப்டேட் கொடுங்க தங்கமே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

தாய்லாந்தில் தளபதி 68 ஷூட்டிங்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மைக் மோகன், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என பலரும் நடித்து வரும் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. துபாய் டூரை முடித்து விட்டு மீனாக்ஷி சவுத்ரியும் தாய்லாந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களா? அல்லது சண்டைக் காட்சியா? என்கிற தகவல்கள் விரைவில் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











