Thalapathy68: அனிருத் குரலில் தளபதி68 ஃபர்ஸ்ட் சிங்கிள்... “மகாராஜா நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா!”

சென்னை: லியோவை தொடர்ந்து விஜய்யின் தளபதி 68 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், தளபதி 68 படத்தின் முதல் பாடலை அனிருத் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து “மகராஜா நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா” என அனிருத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Thalapathy 68: Anirudh has sung the first single of Vijays Thalapathy 68

தளபதி 68ல் இணைந்த அனிருத்
விஜய்யின் 68வது படமான 'தளபதி 68’ அசுர வேகத்தில் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கிவிட்டது. முதல் ஷெட்யூலில் தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் ஷூட்டிங் முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தளபதி 68 அபிஸியல் அப்டேட் வெளியானதுமே ஃபர்ஸ்ட் சிங்கிளை ரெடி செய்து கொடுத்துவிட்டாராம் யுவன்.

இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளதும் தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. மதன் கார்க்கியின் சமீபத்திய பேட்டியில், தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் செம்ம பெப்பியான பாடலாக இருக்கும் என அப்டேட் கொடுத்துள்ளார். ஆனால், இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலிவுட்டின் ராக் ஸ்டாரான அனிருத், விஜய்யின் லியோ படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற நான் ரெடி பாடலைத் தவிர, மற்ற பாடல்களை அனிருத்தே பாடியிருந்தார். அதோடு இல்லாமல் லியோவில் வரும் பிஜிஎம்களிலும் அனிருத் தான் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். இதனை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்திருந்தனர். அனிருத் கம்போஸ் செய்யும் படங்களில் எல்லா பாடல்களும் ஒரே மாதிரியாக இருப்பதோடு, அவரே அந்தப் பாடல்களை பாடி விடுகிறார்.

இதனால் சில பாடல்கள் ரசிக்கும் படி இல்லையென கமெண்ட்ஸ் செய்தனர். அதேபோல் அவர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் தொடர்ந்து பாடி வருகிறார். அப்படித்தான் தற்போது தளபதி 68 படத்திற்காக யுவன் இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளாராம். அது தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இதனையறிந்த ரசிகர்கள், “மஹாராஜா நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா” என ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். அதேநேரம் இந்தப் பாடலை விஜய் பாடியிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X