தளபதி 68 படத்துக்காக யுவனை கழட்டி விட்ட வெங்கட் பிரபு... கண்டுகொள்ளாத விஜய்... இதுதான் நியாயமா?
சென்னை: லியோவைத் தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்.
தளபதி 68 படம் குறித்த அஃபிஸியல் அப்டேட் வெளியாகும் முன்பே அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், தளபதி 68 படத்துக்கு யுவன் இசையமைக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதுவும் இல்லையென கூறப்படுகிறது.
விஜய் - யுவன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை
விஜய்யின் 67வது படமான லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. டைட்டில் டீசருடன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்ட லோகேஷ், அதே வேகத்தில் லியோ படப்பிடிப்பையும் நிறைவு செய்யவுள்ளார். இதனால் தனது 68வது படம் மீது கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் விஜய். இந்தப் படத்தை அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், கோபிசந்த் இவர்களில் ஒருவர் இயக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் வெங்கட் பிரபுவை தளபதி 68 படத்தின் இயக்குநராக டிக் செய்துள்ளாராம் விஜய். வெங்கட் பிரபு சொன்ன ஒன்லைன் ஸ்டோரியில் இம்ப்ரஸான விஜய் தளபதி 68ல் புதிய கூட்டணியுடன் களமிறங்கலாம் என முடிவு செய்துவிட்டாராம். அதேபோல், தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இதனிடையே விஜய் - வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என சொல்லப்பட்டது. வெங்கட்பிரபுவின் படங்கள் அனைத்துக்கும் யுவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் மிக முக்கியமான கூட்டணியான வெங்கட் பிரபு - யுவன் மேஜிக், விஜய்யின் தளபதி 68 படத்திலும் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். விஜய் - யுவன் கூட்டணி புதிய கீதை படத்தில் மட்டுமே இணைந்திருந்தது.

அதன்பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு இக்கூட்டணி இணையும் என கோலிவுட் வட்டாரமே எதிர்பார்த்திருந்தது. அதேபோல், சில மாதங்களுக்கு முன்னர் விஜய் - யுவன் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது விரைவில் இணைவோம் என தெரிவித்திருந்தனர். விஜய்யின் மகன் சஞ்சய்யும் யுவனின் தீவிர ரசிகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தளபதி 68 படத்திற்கு யுவன் இசையமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை தயாரிக்கவுள்ள ஏஜிஎஸ் நிறுவனம் யுவனுக்குப் பதிலாக அனிருத்தை புக் செய்யலாம் என வெங்கட் பிரபுவிடம் சொல்லிவிட்டதாம். வெங்கட் பிரபுவும் வேறு வழியில்லாமல் தயாரிப்பு நிறுவனத்துக்கு சம்மதம் கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் விஜய் - யுவன் கூட்டணியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதேநேரம் தளபதி 68 படத்துக்கு அனிருத் இசையமைப்பது குறித்தும் இதுவரை அஃபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











