Thalapathy 68: “விஜய்க்கே விபூதியா... தளபதி 68ல் சென்னை 28 கேங்..” கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை!

சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ நேற்று வெளியானது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது.

 Thalapathy 68: Blue Sattai Maran Trolls Venkat Prabhu for Thalapathy 68 cast

தளபதி 68 பூஜை வீடியோவில் இந்தப் படத்தின் நடிகர்கள் பற்றியும் படக்குழு அப்டேட் கொடுத்திருந்தது.

இந்நிலையில், தளபதி 68 படத்தில் சென்னை 28 நடிகர்கள் இணைந்துள்ளதை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

வெங்கட் பிரபுவை ட்ரோல் செய்த ப்ளூ சட்டை
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அதிக எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸான லியோ, நெகட்டிவான விமர்சனங்களுடன் தற்போது டல்லடித்துள்ளது. இதனால், உடனடியாக தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 Thalapathy 68: Blue Sattai Maran Trolls Venkat Prabhu for Thalapathy 68 cast

இந்நிலையில் நேற்று வெளியான தளபதி 68 பூஜை வீடியோவில், இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஜய்யுடன் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், யோகி பாபு, வைபவ், மீனாட்சி செளத்ரி, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், விடிவி கணேஷ் ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா என செம்ம மாஸ்ஸான கூட்டணியில் தளபதி 68 உருவாகி வருவதால், தளபதி 68 படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், வெங்கட் பிரபுவின் கேங்கான சென்னை 28 டீமில் இருந்தும் சிலர் தளபதி 68ல் இணைந்துள்ளனர். வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இதனை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார்.

 Thalapathy 68: Blue Sattai Maran Trolls Venkat Prabhu for Thalapathy 68 cast

எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்த், வடிவேலுவின் காமெடி செம்ம ஹிட் அடித்தது. அந்த காமெடியை எடிட் செய்து விஜய்காந்தை ஏஜிஎஸ் நிறுவனமாகவும், வடிவேலுவை வெங்கட் பிரபுவாகவும், வடிவேலு கூட்டி வரும் கும்பலை சென்னை 28 கேங்காக எடிட் செய்தும் கலாய்த்துள்ளார். வெங்கட் பிரபுவின் படங்களில் சென்னை 28 கேங் எப்போதும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது.

 Thalapathy 68: Blue Sattai Maran Trolls Venkat Prabhu for Thalapathy 68 cast

அதனால் தளபதி 68 படத்திலும் அவர்களை அலேக்காக தூக்கிக் கொண்டு வந்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். அதேபோல் பகவதி படத்தில் வரும் விஜய் - வடிவேலு காமெடியையும் இந்த டிவிட்டரில் ரீ-எடிட் செய்து வெங்கட் பிரபுவை ட்ரோல் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X