Thalapathy 68: தளபதி 68ல் இணையும் ராஜூ சுந்தரம்... விஜய் எடுத்த அதிரடி முடிவு... ரெடியான யுவன்!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனிடையே லியோவை தொடர்ந்து விஜய்யும் தனது 68வது படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தின் பூஜை அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தளபதி 68 படத்தில் விஜய்க்காக ராஜூ சுந்தரம் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Thalapathy 68: Dance master Raju Sundaram joined in Vijays Thalapathy 68

தளபதி 68ல் இணையும் ராஜூ சுந்தரம்: கோலிவுட் மட்டுமின்றி இந்திய திரையுலகையே பரபரப்பாக்கியுள்ளது விஜய்யின் லியோ திரைப்படம். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம், அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து செகண்ட் சிங்கிள், ட்ரெய்லர் என லியோவில் இருந்து அடுத்தடுத்து தரமான அப்டேட்கள் சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றன.

லியோவை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள தளபதி 68 படத்தில், விஜய் அப்பா - மகன் என இரட்டை பாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம். இதற்காக அமெரிக்கா சென்ற விஜய், மேக்கப் & பாடி ஸ்கேனிங் டெஸ்ட் எடுத்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார். இதனால் விரைவில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, விஜய்யின் தளபதி 68 பூஜை நாளை அல்லது அக்டோபர் 2ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாம். அதனைத் தொடர்ந்து உடனடியாக 3ம் தேதியில் இருந்தே படப்பிடிப்பும் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக விஜய் ரெடியாகிவிட்டதாகவும், முதலாவதாக பாடல் காட்சியை படமாக்க இயக்குநர் வெங்கட் பிரபு பிளான் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

யுவன் இசையில் தர லோக்கலாக உருவாகியுள்ள தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள், ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்குமாம். முக்கியமாக இந்தப் பாடலுக்கு ராஜூ சுந்தரம் கோரியோகிராபி செய்யவிருப்பதும் கன்ஃபார்மாகியுள்ளது. விஜய்யின் சமீபத்திய படங்களில் ஜானி மாஸ்டர், தினேஷ் மாஸ்டர் ஆகியோர் தான் பாடல்களுக்கு கோரியோகிராபி செய்துள்ளனர். ஆனால், நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ராஜூ சுந்தரம் மாஸ்டருடன் விஜய் இணையவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட்டையும் படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தளபதி 68 ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாம். இந்த ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ் 150 கோடி ரூபாய் வரை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே 100 கோடிக்கும் மேல் வசூலித்துவிட்டது தளபதி 68.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X