தளபதி 68.. பிரபல நடிகரை வச்சு செய்யும் வெங்கட் பிரபு.. எனக்கா இந்த நிலமை என புலம்பும் நடிகர்!
சென்னை: தளபதி 68 திரைப்படத்தின் பட வேலைகள் படுவேகமாக நடந்து வரும் நிலையில், பிரபல நடிகரை வச்சு செய்து வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
விஜய்யின் திரைப்படம் லியோ அக்டோபர் 19ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 68வது திரைப்படமான தளபதி 68 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை இனிதே நடந்து முடிந்துள்ளது.

தளபதி 68: பிகில் படத்தை இயக்கிய ஏஜிஎஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக விஜய் படத்தை இயக்க உள்ளது. இப்படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார். இதனால் ரசிகர்களின் 13 ஆண்டு கால ஏக்கம் நிறைவடைந்துள்ளது. தளபதி 68 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
முன்னணி நடிகர்கள்: இதில், ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரசாத், மைக் மோகன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. பல வருடமாக திரையில் தென்படாமல் இருந்த மைக் மோகன் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் அரவிந்த் சாமி நடிக்கவிருந்த கேர்கடரில் தற்போது அவருக்கு பதிலாக மைக் மோகன் நடிக்க இருக்கிறார்.
டபுள் ஆக்ஷன்: மேலும், இப்படத்தில் அப்பா - மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிக்க இருப்பதாகவும் இரண்டு கேரக்டர்களை 3D VFX ஸ்கேன் டெக்னாலஜி மூலம் உருவாக்குவதற்காக விஜய் உள்பட படக்குழுவினர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதில் இளவயது விஜய்க்கு பிரபுதேவா மற்றும் பிரசாந்த் இருவரும் நண்பர்களாக நடிக்க உள்ளனர்.

புலம்பும் நடிகர்: அதில் பிரபு தேவா ஒல்லியாக இருப்பதால், விஜய்யின் நண்பர் கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி விடுவார். ஆனால் பிரசாந்த் தற்போது உடல் எடை அதிகரித்து இருப்பதால், விஜய்க்கு ஈடாக உடல் எடையை குறைக்கும் படி வெங்கட்பிரபு அவரிடம் கூறி உள்ளதால், பிரசாந்த் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், டென்ஷனான பிரசாந்த், ஒரு காலத்துல நான் எப்படி இருந்தேன் எனக்கே இந்த நிலமையா என நெருங்கிய நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











