யோவ்.. இந்த மாதிரி ஹைப்பை மிஸ்யூஸ் பண்ணா அவ்ளோதான்.. தளபதி 68 இயக்குநரை திட்டும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிரெண்டாகி வரும் நிலையில், சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் தாஸ் கிளிம்ப்ஸை போட்டு சரியான பதில் டிரெண்டிங் போட்டியை விஜய் டீம் நேற்று அமர்க்களப்படுத்தியது.

உடனடியாக தளபதி 68 படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தன் பங்குக்கு நாளை காலை 11 மணிக்கு அப்டேட் இருக்கு என ட்வீட் போட விஜய் ரசிகர்கள் மேலும், வெறியாகி இருந்தனர்.

Thalapathy 68 Director Venkat Prabhu upsets Vijay fans with NOVP movie update

இந்நிலையில், ஷார்ப்பா 11 மணிக்கு வெங்கட் பிரபுவின் ட்விட்டர் பக்கத்தை தேடிச் சென்று பார்த்தவர்களுக்கு மாமா பிஸ்கோத்து என்பது போல "நண்பன் ஒருவன் வந்த பிறகு" படத்தின் அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை பலமாக ஏமாற்றி உள்ளார்.

ஜெயிலருக்கு போட்டியாக: விஜய் அப்டேட் வந்த உடனே அஜித் போட்டோ ஒன்று டிரெண்டாவது போல, ரஜினிகாந்தின் ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் டிரெண்டாகிக் கொண்டிருக்கும் நிலையில், சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு போஸ்டரை எல்லாம் வெளியிட்டால், டிரெண்டை திருப்ப முடியாது என்பதால் அக்டோபர் மாதம் வரப்போகும் படத்தின் கிளிம்ப்ஸை இப்பவே லியோ படக்குழு வெளியிட்டு டிரெண்டிங்கை தன் பக்கம் மாற்றியமைத்தது.

வெங்கட் பிரபு ட்வீட்: உடனடியாக தளபதி 68 படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு நாளை காலை 11 மணிக்கு ட்விட்டர் பக்கம் வாங்க தீபாவளி பரிசு காத்திருக்கு என்பது போல ஒரு ட்வீட்டை போட விஜய் ரசிகர்கள் டபுள் குஷியாகி விட்டனர்.

அடுத்தடுத்து அப்டேட்களை போட்டு ரஜினிகாந்தின் ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் டிரெண்டிங்கை விஜய் காலி செய்யப் போகிறார் என காத்திருந்தனர்.

வேற அப்டேட்: ஆனால், 11 மணிக்கு இயக்குநர் வெங்கட் பிரபு நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன் "நண்பன் ஒருவன் வந்த பிறகு" படத்தின் அப்டேட்டை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து விஜய் ரசிகர்கள் செம காண்டாகி இயக்குநர் வெங்கட் பிரபுவை திட்ட ஆரம்பித்து விட்டனர். தளபதி 68 படத்தின் அப்டேட் என நினைத்த நிலையில், இப்படி ஏமாத்திட்டிங்களே பாஸ் என்றும் ட்வீட்கள் பறக்கின்றன.

தளபதி 68 இயக்குநரை திட்டும் ரசிகர்கள்: இப்படியொரு ஹைப்பை இதுபோன்ற மற்ற படங்களுக்கு பயன்படுத்தி வீணாக்க வேண்டாம் வெங்கட் பிரபு என விஜய் ரசிகர்கள் கடுமையாக ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு திட்டித் தீர்த்து வருகின்றனர்.

லியோ படம் வெளியாகும் வரை தளபதி 68 படம் தொடர்பான எந்தவொரு அப்டேட்டும் வராது என்றும் மொத்த ஃபோகஸும் அந்த படத்தின் பிசினஸில் மட்டுமே இப்போதைக்கு இருக்கும் என தெரிகிறது.

Thalapathy 68 Director Venkat Prabhu upsets Vijay fans with NOVP movie update

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X