Thalapathy 68: வெங்கட் பிரபு கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்... தளபதி 68 அப்டேட் ரெடியா..?

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தனது 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி குறித்து ஏற்கனவே அபிஸியல் அப்டேட் வெளியாகிவிட்டது.

இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு நாளை காலை 11 மணிக்கு ஸ்பெஷல் அப்டேட் வெளியாகவுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

 Thalapathy 68: Fans are expecting Thalapathy 68 update to be released tomorrow

வெங்கட் பிரபு சர்ப்ரைஸ் ட்வீட்:கோலிவுட் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், தற்போது பாக்ஸ் ஆபிஸின் வசூல் மாஸ்டராக வலம் வருகிறார். பீஸ்ட், வாரிசு என தொடர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்த விஜய், அடுத்து இண்டஸ்ட்ரி பிளாக் பஸ்டர் கொடுக்க காத்திருக்கிறார். லோகேஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள லியோ திரைப்படம் தான், தற்போது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்‌ஷன் ஜானரில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள லியோ ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கிவிட்டன. முன்னதாக லியோ ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய்யின் 68வது படம் குறித்த அபிஸியல் அப்டேட் வெளியானது. அதன்படி ஏஜிஎஸ் தயாரிக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ள வெங்கட் பிரபு, அஜித்து மங்காத்தா ஹிட் கொடுத்ததைப் போல தளபதி 68-ஐ இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 68 ப்ரீ புரொடக்‌ஷனில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு, விஜய்யின் சிக்னலுக்காக காத்திருக்கிறாராம். லியோ ஷூட்டிங் முடிந்து வெளிநாடு சென்றுள்ள விஜய், விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Thalapathy 68: Fans are expecting Thalapathy 68 update to be released tomorrow

அதன்படி தளபதி 68 ஷூட்டிங் அக்டோபரில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ட்வீட் போட்டுள்ளார். அதில், "இனிமேல் அடுத்து என்ன... நாளை (ஜூலை 30) காலை 11 மணிக்கு வெளியாகும்" என ட்வீட் செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், இது விஜய்யின் தளபதி 68 அப்டேட்டா என கேட்டு வருகின்றனர்.

சிலர் இது தளபதி 68 அப்டேட் தான் எனக் கூறி வரும் நிலையில், இன்னும் சிலரோ அதற்கு வாய்ப்பில்லை என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். வெங்கட் பிரபு கன்னட நடிகர் கிச்சா சுதீப் உடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் வெங்கட் பிரபு - கிச்சா சுதீப் கூட்டணியில் உருவாகும் படம் பற்றிய அப்டேட்டாக இது இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X