Thalapathy 68: தளபதி 68 பூஜைக்கு நாள் குறித்த விஜய்... ஆனா அங்கதான் இருக்கு டிவிஸ்ட்டே!
சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.
ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தளபதி 68 படத்தின் பூஜைக்கு விஜய் நாள் குறித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68 பூஜை எப்போன்னு தெரியுமா?
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகி வரும் லியோ அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 அப்டேட்டும் வெளியாகிவிட்டது.
அதன்படி, தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. தளபதி 68 அப்டேட் வெளியானதுமே செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு, விஜய்யுடன் இணைவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அதேநேரம் லியோ ரிலீஸான பின்னர் தான், தளபதி 68 படத்தின் அடுத்த அப்டேட்ஸ் வெளியாகும் என கூறிவிட்டார்.
ஆனால், லியோ படத்தில் தனது போர்ஷன் ஷூட்டிங் முடிந்ததும், தளபதி 68ல் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டாராம் விஜய். அதேபோல், இந்தப் படத்தின் பூஜைக்கும் விஜய் நாள் குறித்துவிட்டாராம். அதன்படி, தளபதி 68 பூஜை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தளபதி 68 பூஜையின் போட்டோஸ், வீடியோஸ் எதுவும் உடனே வெளியாகாது எனக் கூறப்படுகிறது.

தளபதி 68 பூஜை வீடியோவை லியோ ரிலீஸான பின்னர் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதனால், தளபதி 68 பூஜை ரொம்பவே சீக்ரெட்டாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தப் படத்திற்காக விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் என்ற தகவல்கள் வெளியாகின. இது உண்மை தான் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தளபதி 68 ப்ரீ ரிலீஸ் பிசினஸ் 400 கோடி வரை நடைபெறும் என்பதால், விஜய்க்கு 200 கோடி கொடுக்க ஏஜிஎஸ் ஓக்கே சொல்லிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதியையும் விஜய் கன்ஃபார்ம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும் 2024 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தளபதி 68 ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தளபதி 68 படத்தில் விஜய் ஜோடியாக க்ருத்தி ஷெட்டி நடிக்கலாம் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











