Thalapathy 68: விஜய்யுடன் இணையும் கரகாட்டகாரன் பிரபலம்... தளபதி 68 Play List இதுதான்!
சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் துருக்கியில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் கரகாட்டகாரன் பிரபலம் இயணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68ல் இணைந்த கரகாட்டகாரன் பிரபலம்
விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. லியோ ரிலீஸுக்கு முன்னரே தளபதி 68 ஷூட்டிங் தொடங்கிவிட்டது. முதலில் சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு அடுத்து தாய்லாந்தில் நடைபெற்றது.
இதனையடுத்து மீண்டும் சென்னையில் நடைபெற்ற தளபதி 68 படப்பிடிப்பு, இப்போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தொடரவுள்ளது. இந்நிலையில், புத்தாண்டு ஸ்பெஷலாக தளபதி 68 அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தளபதி 68 டைட்டில், விஜய் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதனிடையே இன்னொரு முக்கியமான அப்டேட்டும் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் தளபதி 68 படத்தில் மொத்தம் 5 பாடல்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெக்கார்டிங் முடிந்துவிட்டதாகவும், இந்தப் பாடல் சும்மா தர லோக்கலில் அதிரும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், தளபதி 68 படத்தில் விஜய்யுடன் கரகாட்டகாரன் பிரபலம் ஒருவரும் இணைந்துள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை, வெங்கட் பிரபுவின் தந்தையும் பிரபல இயக்குநருமான கங்கை அமரன் தானாம். இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர் கங்கை அமரன். அவர் தளபதி 68 படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபுதேவா, ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் தளபதி 68 படத்தில் நடித்து வருகின்றனர். இதனால், இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடம் ஹைப் காணப்படுகிறது. தளபதி 68 திரைப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











