Thalapathy 68: தளபதி 68 பூஜையில் நடந்த சுவாரஸ்யம்... பிரபுதேவாவின் லூட்டி... பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ளது.
லியோ ட்ரெய்லரை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள நிலையில், தளபதி 68 படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 ஷூட்டிங் சென்னையில் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக தளபதி 68 பூஜை விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள் பற்றி, வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன் மனம் திறந்துள்ளார்.
தளபதி 68 பூஜையில் நடந்த சுவாரஸ்யம்
விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, வரும் 19ம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட கோலிவுட்டே லியோ ட்ரெய்லரை எதிர்பார்த்துள்ளனர். அதேநேரம் விஜய் தற்போது தனது 68வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் தற்போதைக்கு 'தளபதி 68' என்ற டைட்டிலில் உருவாகவுள்ளது. தளபதி 68 படத்தில் அப்பா - மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கவுள்ளாராம். மேலும், விஜய்யுடன் சினேகா, அரவிந்த் சாமி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், வைபவ், மீனாட்சி செளத்ரி ஆகியோரும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தளபதி 68 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளிலும் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். முன்னதாக இந்தப் படத்தின் பூஜை விழா சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் நடந்துள்ளது. அதில், விஜய், வெங்கட் பிரபு, பிரபுதேவா, பிரேம்ஜி உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுடன் வெங்கட் பிரபுவின் தந்தையும் பிரபல இயக்குநருமான கங்கை அமரனும் பங்கேற்றுள்ளார்.
அப்போது தளபதி 68 பூஜை விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள் பற்றி, சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் கங்கை அமரன். அதில் தானும் தளபதி 68 பூஜையில் பங்கேற்றதாக கூறிய கங்கை அமரன், பிரபுதேவா, வெங்கட் பிரபு ஆகியோருடன் நானும் ஜாலியாக பேசி அட்ராசிட்டி செய்ததாகக் கூறியுள்ளார். பிரபுதேவா நீண்ட நாட்களுக்குப் பின்னர் எல்லோரையும் ஜாலியாக கலாய்த்துக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் விஜய்யை சின்ன வயதில் பார்த்தபோது எப்படி சிம்பிளாக இருப்பாரோ, இப்போதும் அப்படியே தான் இருக்கிறார். அவர் கொஞ்சம் கூட மாறாமல் இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். மேலும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அனைவரும் இணைந்து விஜய்யுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டதாகவும் கங்கை அமரன் கூறியது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











