Thalapathy 68: மீண்டும் அக்கட தேசத்து இயக்குநர்தான்... ரிலீஸ் தேதியுடன் ரெடியான தளபதி 68 அப்டேட்

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், லியோ ஷூட்டிங் முடியும் முன்பே தளபதி 68 அப்டேட்டை வெளியிட விஜய் முடிவு செய்துவிட்டாராம்.

அதன்படி, தளபதி 68 படத்தின் இயக்குநர், ரிலீஸ் தேதி போன்ற தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

 Thalapathy 68: Gopichand Malineni Gonna Direct Vijays Thalapathy 68 Film Is Getting Stronger

தளபதி 68 இயக்குநர் ரெடி:விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ்களுடன் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வரும் லியோ ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாகிறது. இதனிடையே தற்போது காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னையில் ஓய்வெடுத்து வருகிறார் விஜய்.

லியோ இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதற்குள் தனது 68வது படத்தின் இயக்குநர் யார் என்பதை முடிவு செய்துவிட்டார் விஜய். தளபதி 68 படத்தை அட்லீ தான் இயக்குவார் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ஜவான் படத்தின் பணிகள் இன்னும் இழுத்துக்கொண்டே இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்றானது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இருவரும் விஜய்யை சந்தித்து கதை கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டில் கோபிசந்த் மலினேனியின் கதையை விஜய் தற்போது ஓக்கே செய்துவிட்டாராம். இதனால், வாரிசு படத்திற்குப் பின்னர் மீண்டும் அக்கட தேசத்து இயக்குநருடன் விஜய் இணைவது உறுதியாகியுள்ளது.

 Thalapathy 68: Gopichand Malineni Gonna Direct Vijays Thalapathy 68 Film Is Getting Stronger

விஜய் - கோபிசந்த் மலினேனி இணையும் தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படமாக தளபதி 68 உருவாகவுள்ளதாம். மேலும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவும் வாய்ப்புள்ளதாம். இந்நிலையில், தளபதி 68 அப்டேட்டை மிகப் பிரம்மாண்டமாக அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், வரும் செப்டம்பர் மாதம் தளபதி 68 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும், விரைவாக படப்பிடிப்பை முடித்துவிட்டு 2024 ஏப்ரல் 14ம் தேதி தளபதி 68 படத்தை வெளியிடவுள்ளார்களாம். தளபதி 68 டைட்டில், விஜய்யின் மோஷன் போஸ்டர் என அடுத்தடுத்து தரமான அப்டேட்டை வெளியிட சூப்பர் குட் பிலிம்ஸ் ரெடியாகிவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X