Thalapathy 68: தளபதி 68ல் இணையும் இன்னொரு மாஸ் ஹீரோ... விஜய்க்காக இப்படியொரு சம்பவமா..?

சென்னை: விஜய் நடித்து வரும் தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31ம் தேதி மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யுடன் இன்னொரு மாஸ் ஹீரோ இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் இணையும் மாஸ் ஹீரோ
விஜய்யின் தளபதி 68 படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வாரிசு, லியோ என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த விஜய், அடுத்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் முதல் படம் தளபதி 68 என்பதும் குறிப்பிடத்தக்கது.

 Thalapathy 68: Kannada Actor Kichcha Sudeep onboard in Vijays Thalapathy 68

ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் தளபதி 68 படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, இவானா, அஜ்மல், மாளவிகா ஷர்மா, யோகி பாபு, பிரேம்ஜி என பெரும் பட்டாளமே இணைந்துள்ளது. வாரிசு, லியோவை தொடர்ந்து தளபதி 68ம் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகிறது.

இந்நிலையில் இந்த கூட்டணி போதாதென்று இன்னும் ஒரு டாப் ஹீரோவையும் களமிறக்குகிறாராம் வெங்கட் பிரபு. அதன்படி, தளபதி 68 படத்தில் கன்னட மாஸ் ஹீரோ கிச்சா சுதீப்பும் கமிட்டாகியுள்ளாராம். ஏற்கனவே விஜய்யுடன் புலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார் கிச்சா சுதீப். இப்போது தளபதி 68ல் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். இதுபற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

கஸ்டடி படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே, வெங்கட் பிரபுவின் அடுத்த ஹீரோ கிச்சா சுதீப் தான் என செய்திகள் வெளியாகின. கிச்சா சுதீப்பை வெங்கட் பிரபு சந்தித்த போட்டோஸ் அடிக்கடி வைரலாகின. அதன்படி கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், இப்போது கிடைத்த தகவலின் படி, தளபதி 68 படத்தில் தான் கிச்சா சுதீப் நடிக்கவிருப்பதாகவும், அதற்காகவே அந்த சந்திப்புகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம் தளபதி 68ல் கிச்சா சுதீப் நடித்தாலும், அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்திலும் அவர் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இப்போதைக்கு தளபதி 68ல் கிச்சா சுதீப் இணைவது தான் விஜய் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. விஜய் தனது கேரியரில் இதுவரை இத்தனை முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது இல்லை. அது தளபதி 68 படத்தில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தளபதி 68 டைட்டில் Boss அல்லது Buzzle என செய்திகள் வெளியாகின. அதனை மறுத்துவிட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தளபதி 68 வெரைட்டியாக இருக்கும் எனவும், டைட்டில் அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X