Thalapathy 68: மீண்டும் கேங்ஸ்டராகும் விஜய்... தளபதி 68 இயக்குநர் ரேஸில் அட்லீக்கு பதில் இவரா?
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் ஆயுத பூஜைக்கு வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது அட்லீக்குப் பதிலாக மேலும் இரண்டு இயக்குநர்கள் இந்த ரேஸில் களமிறங்கியுள்ளனர்.

தளபதி 68 எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்: வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் தற்போது லியோ படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படம், ஆயுத பூஜை விடுமுறைக்கு ரிலீஸாகவுள்ளது. இதனையடுத்து உடனடியாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளாராம் விஜய். இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாம்.
தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனை நடிகர் ஜீவா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆர்.பி செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ், விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவரது படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் தளபதி 68 படத்தின் இயக்குநர் யார் என்பதே அடுத்த கேள்வியாக உள்ளது.
முதலில் கிடைத்த தகவலின் படி, தளபதி 68 படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ. அதனால் தளபதி 68 படத்தில் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷாருக்கானின் ஜவான் வேலைகள் இன்னும் முடியாததால், அட்லீக்கு பதிலாக புதிய இயக்குநருடன் இணைய விஜய் முடிவு செய்துள்ளாராம்.

அதன்படி, விஜய்யின் தளபதி 68 படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கலாம் என தகவல்கள் தெரிவித்தன. தெலுங்கில் பாடிகார்டு, வின்னர் உட்பட சில படங்கள் இயக்கியுள்ள கோபிசந்த் மலினேனி, இறுதியாக பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தை டைரக்டர் செய்திருந்தார். சமீபத்தில் விஜய்யை சந்தித்த கோபிசந்த் மலினேனி, அவரிடம் ஒரு ஆக்ஷன் ஜானர் கதையை கூறியுள்ளாராம். ஆனால், விஜய் தரப்பில் இருந்து இன்னும் ஓகே சொன்னதாக தெரியவில்லை.
அதேநேரம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் விஜய்யை நேரில் சந்தித்து கதை சொன்னதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது விஜய்க்காக மட்டுமே எழுதப்பட்ட கேங்ஸ்டர் கதை என்றும் சொல்லப்படுகிறது. பீட்சா படம் மூலம் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ், ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, மஹான் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய்க்காக எழுதப்பட்ட கதை ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என தெரிகிறது.
ஆனால், கோபிசந்த் மலினேனி, கார்த்திக் சுப்புராஜ் இருவரில் யார் தளபதி 68 படத்தின் இயக்குநர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதுபற்றிய அபிஸியல் அப்டேட்டை சூப்பர் குட் பிலிம்ஸ் விரைவில் வெளியிட உள்ளதாம். அதனால், லியோ படம் முடிந்ததும் உடனடியாக தளபதி 68 ஷூட்டிங் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. விஜய் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதன்முறையாக இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











