Thalapathy 68: விஜய்க்கு தூண்டில் போட்ட 19 வயது இளம் நடிகை... எதுக்குன்னு தெரிஞ்சா அவ்வளவு தான்!

சென்னை: விஜய் தற்போது லியோ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.

 Thalapathy 68: Krithi Shetty will play the female lead in Vijays Thalapathy 68

இதனைத் தொடர்ந்து உடனடியாக தளபதி 68 படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துவிட்டாராம் விஜய்.

கோபிசந்த் மலினேனி இயக்குவதாகக் கூறப்படும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க 19 வயது இளம் நடிகை தூண்டில் போட்டு வருகிறாராம்.

விஜய்க்கு தூண்டில் போடும் இளம் நடிகை
பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு உடனடியாக வாரிசு படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விஜய். அதேபோல், வாரிசு திரைப்படம் வெளியானதுமே லியோ ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ கேங்ஸ்டர் ஜானர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் 60 நாட்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாம். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அட்லீ, கார்த்திக் சுப்புராஜ் இருவரும் தளபதி 68 இயக்குநர் லிஸ்ட்டில் இருந்த நிலையில், விஜய் கோபிசந்த் மலினேனியை டிக் செய்துள்ளாராம். விஜய் - கோபிசந்த் மலினேனி இணையும் தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை தட்டிப் பறிப்பதில் நடிகைகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். லியோவைத் தொடர்ந்து தளபதி 68 படத்திலும் த்ரிஷா தான் நாயகி என சொல்லப்பட்டது. அதேபோல், வாரிசு நாயகி ராஷ்மிக மந்தனாவும் விஜய்க்கு தூதுவிட்டிருந்தாராம். ஆனால், இவர்களை ஓவர்டேக் செய்யும் வேலையில் 19 வயது இளம் நடிகையும் களமிறங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கில் உப்பென்னா படத்தில் அறிமுகமான கிருத்தி ஷெட்டி, லிங்குசாமி இயக்கிய தி வாரியர் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இந்த வரிசையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்திலும் நாக சைதன்யா ஜோடியாக நடித்துள்ளார். இந்த வாரம் வெளியான கஸ்டடி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கிருத்தி ஷெட்டி கலந்துகொண்டார். அப்போது அவர் த்ரிஷா தான் தனது ரோல் மாடல் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் இல்லாமல், விஜய்யுடன் நாயகியாக நடிக்க வேண்டும் எனவும் தனது விருப்பத்தைக் கூறியிருந்தார். இந்த ப்ரோமோஷன் பேட்டிக்கு முன்னதாகவே தளபதி 68 படத்தில் ஜோடியாக நடிக்க கிருத்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். அதுவும் கிருத்தி ஷெட்டியே தூதுவிட்டு இந்த வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கிருத்தி ஷெட்டியை இப்போது கைகளில் பிடிக்கவே முடியவில்லையாம்.

விஜய்யுடன் ஜோடியாக நடித்துவிட்டால், அதனை வைத்தே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துவிடும் என பிளான் போட்டுள்ளாராம் கிருத்தி ஷெட்டி. இதனால் விரைவில் கிருத்தி ஷெட்டியின் ஆசை நிறைவேறும் என சொல்லப்படுகிறது. சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படமான தளபதி 68, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தளபதி 68 அப்டேட்டை மிகப் பிரம்மாண்டமாக அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X