Thalapathy 68: தளபதி 68 அப்டேட்டால் டென்ஷனான லியோ தயாரிப்பாளர்... அதிர்ச்சியில் வெங்கட் பிரபு!

சென்னை: விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே விஜய்யின் தளபதி 68 அப்டேட் வெளியானது.

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், தளபதி 68 அப்டேட் திடீரென வெளியானதால் லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார் டென்ஷனாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Thalapathy 68: Leo film producer Lalit Kumar unhappy with Thalapathy 68 update

தளபதி 68 அப்டேட்டால் கடுப்பான லியோ தயாரிப்பாளர்

விஜய் தற்போது தனது 67வது படமான லியோவில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை லலித் குமாரின் 7 screen studio தயாரித்து வருகிறது. ஏற்கனவே விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான மாஸ்டர் படத்தையும் லலித் குமார் தான் தயாரித்திருந்தார்.

அதேபோல், வாரிசு படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரைட்ஸும் லலித் குமாரின் 7 screen studio கைவசம் தான் சென்றது. இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் சூடி பிடிக்கத் தொடங்கியுள்ளதாம். ஆனால், அதேநேரம் விஜய்யின் தளபதி 68 அப்டேட்டும் வெளியானதால் லலித் குமார் டென்ஷனாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

விஜய்க்காக பட்ஜெட் பற்றியெல்லாம் யோசிக்காமல் லியோ படத்தைத் தயாரித்து வருகிறார் லலித் குமார். வாரிசு படம் வெளியாகும் முன்பே விஜய்யின் தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்குவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், வாரிசு படம் வெளியாகும் வரை லலித் குமார் எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்தார். வாரிசு படத்தின் பிசினஸ் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் லியோ அப்டேட் வெளியாகவில்லை.

 Thalapathy 68: Leo film producer Lalit Kumar unhappy with Thalapathy 68 update

வாரிசு ரிலீசான பின்னரே லியோ படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ஆனால், தற்போது லியோ படம் வெளியாகும் முன்னரே தளபதி 68 அப்டேட்டை வெளியிட்டுவிட்டார் விஜய். இதனால் இப்போது லியோ படத்தைவிடவும் தளபதி 68 மீதான எதிர்பார்ப்புதான் அதிகரித்துள்ளது. அதேபோல், தளபதி 68 படத்தின் விஜய் சம்பளம் என்ன, ஹீரோயின் யார் என்ற கேள்விகள் தான் ட்ரெண்டாகி வருகின்றன.

இதனால் லியோ படம் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிட்டதாக தயாரிப்பாளர் லலித் குமார் கடுப்பில் உள்ளாராம். மேலும், லியோ ப்ரீ ரிலீஸ் பிசினஸில் பாதிப்பு வரும் எனவும் அச்சத்தில் இருக்கிறாராம். அதனால், இனிமேல் தளபதி 68 அப்டேட் எதுவாக இருந்தாலும் லியோ ரிலீஸான பின்னர் தான் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது. இதனை கேள்விப்பட்ட வெங்கட் பிரபு அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Thalapathy 68: Leo film producer Lalit Kumar unhappy with Thalapathy 68 update

இதனிடையே தளபதி 68 பூஜை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தளபதி 68 பூஜையின் போட்டோஸ், வீடியோஸ் எதுவும் உடனே வெளியாகாது எனவும் கூறப்படுகிறது. லியோ ரிலீஸான பின்னர் தளபதி 68 பூஜை வீடியோவை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதனால், தளபதி 68 பூஜை ரொம்பவே சீக்ரெட்டாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தளபதி 68 அப்டேட்டால் லலித் குமார் அதிருப்தியானது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X