Thalapathy 68: தளபதி 68-ல் அடுத்த சர்ப்ரைஸ்... விஜய்யுடன் இணையும் மலையாள டாப் ஹீரோ!!
சென்னை: விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் கேப் இல்லாமல் வேகமாக நடைபெற்று வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா மூவரும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் இன்னொரு டாப் ஹீரோவையும் வளைத்துப் போட்டுள்ளாராம் வெங்கட் பிரபு.
இதனால், தளபதி 68 படத்தில் செம்ம சர்ப்ரைஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 68ல் இணைந்த துப்பாக்கி பட பிரபலம்
லியோவைத் தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தில் பிஸியாகிவிட்டார். தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் தொடங்கி தாய்லாந்து சென்ற தளபதி 68 டீம், மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை தொடர்ந்து வருகிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, பிரேம்ஜி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பிரம்மாண்டமான பட்ஜெட், மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணி என லியோவை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது தளபதி 68. அதேபோல், தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிளையும் யுவன் ஷங்கர் ராஜா முடித்துவிட்டாராம்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் தளபதி 68 படப்பிடிப்பில் விஜய்யுடன் அனைத்து நடிகர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் அவுட்டோர் ஷூட்டிங் செல்லாமல், ஸ்ரீ கோகுலம் ஸ்டூடியோவில் தளபதி 68 படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம் வெங்கட் பிரபு. இதனிடையே இந்தப் படத்தில் இன்னொரு டாப் ஹீரோவும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, மலையாள முன்னணி ஹீரோ ஜெயராம் தளபதி 68ல் நடிக்கவுள்ளாராம்.
தளபதி 68ல் கேமியோ ரோலில் மட்டுமே ஜெயராம் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்துள்ளார் ஜெயராம். அதேபோல் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்திலும் வில்லனாக மாஸ் காட்டியிருந்தார். இப்போது தளபதி 68-ல் விஜய், வெங்கட் பிரபு கூட்டணியிலும் மலையாள டாப் ஹீரோ ஜெயராம் இணைந்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி 68 பூஜை வீடியோவில் ஜெயராம் நடிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜெயராமின் கேமியோ ரோல் சஸ்பென்ஸாக இருக்க வேண்டும் என்றே இதுவரை படக்குழு அப்டேட் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜெயராம் சென்னையில் நடக்கும் தளபதி 68ல் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











