Thalapathy 68: தளபதி 68 படமும் அந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா?.. லியோ நிலைமை வராமல் இருந்தா சரி!
சென்னை: தெலுங்கு மற்றும் மலையாள படங்களை ரீமேக் செய்து நடித்து வந்த நடிகர் விஜய் சமீப காலமாக ஹாலிவுட் படங்களை தழுவி உருவாகும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை தழுவி உருவாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தின் கதை வரை எடுத்த நிலையில், படம் நன்றாகவே இருந்தது. அந்த படத்தில் ஹீரோவுக்கு ஃபிளாஷ்பேக்கே இருக்காது. அதை காண்பிக்க நினைத்த இடத்தில் தான் படம் சொதப்பி விட்டது. இந்நிலையில், தளபதி 68 படம் லூப்பர் எனும் படத்தின் ரீமேக் என்கிற பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.
நெகட்டிவ் ஷேடுக்கு ஏங்கும் விஜய்: ரஜினிகாந்த், அஜித் போல நடிகர் விஜய் பெரிதாக நெகட்டிவ் ஷேடில் நடித்ததே இல்லை. லியோ படமே தன்னுடைய நெகட்டிவ் ஷேடை வெளிப்படுத்தும் விதமாகவே விஜய் நடித்திருந்தார். அழகிய தமிழ் மகன் படத்தில் வில்லனாக விஜய் நடித்தாலும் அது பெரிதாக எடுபடவில்லை.
லியோ விஜய் தான் படத்தின் வில்லன் என்றும் அப்பா நரபலி கொடுப்பது எல்லாம் கற்பனையான ஃபிளாஷ்பேக் என்றும் ஏகப்பட்ட ஃபேன் தியரி வலம் வருகின்றன. இந்நிலையில், தளபதி 68 படத்திலும் வில்லன் விஜய் தான் என்றும் அதிலும், நெகட்டிவ் ஷேடில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹாலிவுட் பட காப்பியா?: பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரியான் ஜான்சன் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு சுமார் 11 வருடங்களுக்கு முன்பாக வெளியான ஹாலிவுட் படமான லூப்பர் படத்தின் ரீமேக் தான் தளபதி 68 படமா? என்கிற பேச்சுக்கள் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
ப்ரூஸ் வில்லிஸ், எமிலி பிளண்ட், ஜோசப் கார்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படம் டைம் டிராவல் கதை படம் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் உள்ளவர்கள் யாரையாவது பழிவாங்க வேண்டும் என்றால், கடந்த காலத்திற்கு ஹிட்மேன்களை அனுப்பி வேண்டாதவர்களை அவர்களின் கடந்த காலத்திலேயே போட்டுத் தள்ளுவது தான் அந்த படத்தின் கதை.
வெங்கட் பிரபு: இயக்குநர் வெங்கட் பிரபு படங்கள் முழுக்கவே ஹாலிவுட் படங்களின் தாக்கம் இருப்பது வழக்கமான ஒன்று தான் என்பதால், தளபதி 68 படத்தின் கதையும் இதே கதையா? அல்லது வேறு ஒரு ஹாலிவுட் படத்தின் கதையா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











