தளபதி 68 போஸ்டரில் இவ்வளவு விஷயம் இருக்கா..? அடேங்கப்பா அப்போ பெரிய சம்பவம் தான் போல!

சென்னை: லியோ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே தளபதி 68 அப்டேட்டை வெளியிட்டுள்ளார் விஜய்.

விஜய் ரசிகர்களே எதிர்பாராத தருணத்தில் தளபதி 68 அப்டேட் வெளியாகி ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய்யே நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்தப் போஸ்டரில் இருக்கும் மர்மங்களை ரசிகர்கள் கண்டுபிடித்து வைரலாக்கி வருகின்றனர்.

 Thalapathy 68: Mysteries Hidden in Vijays Thalapathy 68 Poster revealed now

தளபதி 68 போஸ்டரில் இருக்கும் மர்மங்கள்:விஜய்யின் தளபதி 68 அப்டேட் வெளியானது முதலே கோலிவுட் இண்டஸ்ட்ரி பரபரப்பாக காணப்படுகிறது. வழக்கமாக ஒரு படம் வெளியான பின்னரே தனது அடுத்த பட அப்டேட்டை வெளியிடுவார் விஜய். ஆனால், பீஸ்ட் வெளியாகும் முன்பே வாரிசு அப்டேட் வெளியானது. அதேபோல், வாரிசு ரிலீஸானதுமே லியோ பட அப்டேட் வந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது லியோ ஷூட்டிங் முடியும் முன்பே தளபதி 68 அப்டேட்டை வெளியிட்டார் விஜய். அதன்படி, இந்தப் படத்தை ஏஜிஎஸ் தயாரிக்கவிருப்பதும், வெங்கட் பிரபு இயக்குவதும் உறுதியாகியுள்ளது. அதேபோல், யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதனையடுத்து திரை பிரபலங்கள் உட்பட பலரும் வெங்கட் பிரபு, யுவன் ஆகியோருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வெளியான தளபதி 68 மோஷன் போஸ்டரை ரசிகர்கள் அங்குலம் அங்குலமாக அலசிவிட்டனர். மேலும், இந்தப் போஸ்டரில் ஒளிந்திருக்கும் மர்மங்களையும் டீட்டெய்லாக விவரித்துள்ளனர். மோஷன் போஸ்டர் வீடியோவின் தொடக்கத்தில் கவுண்டவுன் இருப்பதால் இந்தப் படம் 1990களின் கதைகளமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர். அடுத்த பிரேமில் இடது பக்கத்தில் ஒரு கடிகாரம் தலைகீழாக உள்ளது. மேலும் அந்த செய்தித்தாளில் பழைய குடோன்கள், ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் பின்னர் வலது பக்கத்தில் ஒரு பூதக்கண்ணாடி உள்ளது. இதனால் கொலை அல்லது குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ஒரு கும்பல் அல்லது அதை பற்றிய வழக்கை விசாரிக்கும் டிடெக்ட்டிவாக விஜய் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேபோல் இந்த செய்தித்தாள்கள், வலது புறத்தில் இருக்கும் நாளிதழ்களை வைத்து பார்க்கும் போது, இந்தப் படத்தின் கதைக்களம் இந்தியா இல்லாத வெளிநாடுகளில் நடப்பது போல் இருக்கலாம் என தெரிகிறது.

மேலும், மோஷன் போஸ்டரில் வரும் பேனாவில் V என்ற எழுத்து இரண்டுமுறை வருகிறது. இதை V2 அல்லது V Square என எடுத்துக்கொள்ளலாம், விஜய், வெங்கட் பிரபு இருவரின் பெயரும் V என்ற எழுத்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக செய்திதாளின் மத்தியில் உள்ள ஒரு புதிரில், BETTY WHITE என்ற பெயர் உள்ளது. இது பல ஆண்டுகளாக அமெரிக்க தொலைக்காட்சி பார்வையாளர்களை சிரிக்க வைத்து தனது 99வது வயதில் காலமான பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

 Thalapathy 68: Mysteries Hidden in Vijays Thalapathy 68 Poster revealed now

அதேபோல், "AFTER SIZZLING APRIL, TEMPERATURES IN MAY TO BE HIGH IN NORTH, WEST" என்ற வார்த்தைகளும் கவனம் ஈர்த்துள்ளன. மேலும் இன்னொரு வரியில் தெலுங்கு நடிகர் NTR-ன் பெயரும் உள்ளது. இதனால், தளபதி 68 படத்தில் ஜூனியர் NTR கேமியோ ரோலில் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் விஜய், தளபதி, வெங்கட் பிரபு ஆகிய மூன்று பெயர்களிலும் A என்ற எழுத்து ஒன்றிணைக்கிறது. இது வெங்கட் பிரபுவின் தனி யுனிவர்ஸ்க்கான லீடாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாக இந்த தளபதி 68 "A VENKAT PRABHU PUZZLE" என்ற டேக் லைனோடு வெளியாகும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சில நொடிகள் மட்டுமே ஓடும் ஒரு மோஷன் போஸ்டரை வைத்து தளபதி 68 படத்தின் மொத்த கதையையும் சொந்தமாக எழுதிவிட்டனர் ரசிகர்கள். இதுதான் தளபதி 68 படத்தின் கதையா என வெங்கட் பிரபு தான் கூற வேண்டும். ஆனால், அவர் எல்லாமே சஸ்பென்ஸ் எனக் கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X