Thalapathy 68: விஜய்க்கு மட்டும் 200 கோடி... மற்றவர்களின் சம்பளத்தில் பாதி கட்... தளபதி 68ல் தடாலடி!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.
விஜய்யின் ஆக்ஷன் வெறித்தனத்தை பார்த்த ரசிகர்கள், லியோ படத்தை பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்னொருபக்கம் விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் படத்தில் விஜய்யின் சம்பளத்திற்காக மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்களின் சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு மட்டும் 200 கோடி சம்பளம்: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், லியோ ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், லியோ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தளபதி 68 அப்டேட்டும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் தற்போதைக்கு 'தளபதி 68' என்ற டைட்டிலில் உருவாகிறது. லியோவை தொடர்ந்து தளபதி 68 படத்திலும் விஜய் இரண்டு கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், சினேகா, அரவிந்த் சாமி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், வைபவ், மீனாட்சி செளத்ரி ஆகியோரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தளபதி 68 படத்தின் படத்தின் பூஜை விழா இரு தினங்களுக்கு முன்னர் சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பும் வேகமாக நடைபெறவுள்ளது. இதனிடையே தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். லியோ படத்திற்காக 125 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கினார் விஜய். இப்போது அதைவிடவும் 75 கோடி ரூபாய் கூடுதலாக வாங்கவிருப்பது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.

ஆனால், தளபதி 68 படத்தின் சம்பள விவகாரத்தில் அதைவிட சில குளறுபடிகள் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது விஜய்க்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க வேண்டியிருப்பதால், மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு சம்பளத்தை குறைத்துள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். ஒவ்வொருவரின் சம்பளத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை சம்பளத்தை குறைக்க ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
இதனால், படக்குழுவினரே அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் சம்பளத்தை குறைப்பது, கோலிவுட்டிலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால், சில நட்சத்திரங்கள் தளபதி 68 படத்தில் இருந்து வெளியேறுவார்களா எனவும் எதிர்பார்க்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











