Thalapathy 68: லலித் கொடுத்த பிரஷர்.. சைலன்ட்டான விஜய்.. தள்ளிப்போகும் தளபதி 68 பூஜை?

சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் நடிகர் விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 படத்தின் பூஜையை உடனடியாக விஜய்யின் பிறந்தநாள் அன்றே போட்டு விட திட்டமிட்டு இருந்த நிலையில், இதுவரை நடிகர் விஜய்யிடம் இருந்து அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாரிசு படம் வெளியாகும் முன்னதாகவே லியோ படத்தின் பூஜையை இதே போலத்தான் லலித் போட வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் இல்லாமல் போய் விட்டது.

Thalapathy 68 pooja not happened on Vijays birhthday due to Leo Producer pressure

தற்போது மங்காத்தாவை விட மாஸாக ஒரு படத்தை விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுக்கப் போகிறார் என லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு டோட்டலாக டவுன் ஆக ஆரம்பித்த நிலையில், உஷாரான லலித் நடிகர் விஜய்க்கு கொடுத்த பிரஷர் தான் இந்த அமைதிக்கு காரணம் என்கின்றனர்.

மாணவர்களை சந்திக்கும் விஜய்: வரும் ஜூன் 17ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை சந்தித்து அவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகையை வழங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.

இது நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜூன் 22ம் தேதி என்ன ஸ்பெஷல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.

ஏஜிஎஸ் போட்ட திட்டம்: வரும் ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்றே தளபதி 68 படத்தின் பூஜையை போட்டு விடலாம் என ஏஜிஎஸ் நிறுவனம் பக்கா ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், முதலில் அதற்கு ஓகே சொன்ன விஜய் தற்போது அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

லலித் கொடுத்த பிரஷர்: வாரிசு படத்தை போலவே லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்து தளபதி 68 படத்தின் பக்கம் ரசிகர்கள் திரும்பி விட்டால் லியோ படத்தின் பிசினஸ் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த தயாரிப்பாளர் லலித் தற்போது பட பூஜை வேண்டாம் என்றும் லியோ வெளியானதும் ஆரம்பிங்க விஜய் என அழுத்தம் கொடுத்துள்ளாராம்.

லலித் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது என்பதை உணர்ந்து கொண்ட நடிகர் விஜய் இப்போதைக்கு லியோ படத்தில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், தளபதி 68 படத்தை ஆரம்பிக்கும் பணிகள் லியோ ரிலீசுக்குப் பிறகு தான் என்கிற முடிவில் திட்டவட்டமாக உள்ளார் என்கின்றனர்.

Thalapathy 68 pooja not happened on Vijays birhthday due to Leo Producer pressure

விஜய் பர்த்டேக்கு ஒண்ணுமில்லையா: அப்போது நடிகர் விஜய்யின் பிறந்தநாள் பரிசு ரசிகர்களுக்கு ஏதுமில்லையா? என்கிற கேள்விக்கு லியோ டீமில் இருந்து ஒரே ஒரு போஸ்டர் மட்டும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

யானை பசிக்கு சோளப்பொரியா என ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். தனது ரசிகர்களுக்காக நடிகர் விஜய் வேறு ஏதாவது பிளான் வைத்திருப்பார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X