தளபதி 68 பூஜை அப்டேட்.. LCUவை தொடர்ந்து VCU வேண்டும் என அடம்பிடிக்கும் விஜய் ரசிகர்கள்.. செம மீம்!
சென்னை: தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் VCU - வெங்கட் பிரபு யூனிவர்ஸ் வேண்டும் என வீடியோ மீம் ஒன்றை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் லியோ படம் மூலம் விஜய் இணைந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வரும் நிலையில், தளபதி 68 படத்தையும் அதே போல மாற்ற வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருவதாக மீம் போட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு வழக்கம் போல தனது கம்பெனி ஆர்ட்டிஸ்ட் கோஷ்டியை தளபதி 68 படத்திலும் இறக்கிய நிலையில், தற்போது இந்த மீம் தீயாக பரவி வருகிறது.
லியோவுக்காக வெயிட்டிங்: லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தளபதி 68 படத்திற்கான பூஜை போடப்பட்டு ஷூட்டிங்கையும் நடிகர் விஜய் ஆரம்பித்து விட்டார். ஆனால், தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியானால் லியோ படத்தின் வசூல் அடி வாங்கும் என்பதால் லலித் குமார் வைத்த கோரிக்கையை ஏற்று தளபதி 68 பூஜை வீடியோவை லியோ ரிலீஸுக்கு பிறகு வெளியிட அர்ச்சனா கல்பாத்தி உறுதியளித்திருந்த நிலையில், விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68 பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ரியல் விஜய் தசமி: நடிகர் பார்த்திபன் பெயர் லியோவில் விஜய்க்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், பெயர் அளவிலாவது லியோவில் பங்கேற்றதில் சந்தோஷம் என தொடர்ந்து விஜய் படத்தில் நடிக்க பிட்டு போட்டு வரும் பார்த்திபன் இன்று வெளியான பூஜை வீடியோவை பார்த்து ரியல் விஜய் தசமி என விஜயதசமியை வைத்து தனது வார்த்தை விளையாட்டால் மீண்டும் விஜய்க்கு பெரிய ஐஸ் ஃபேக்டரியையே வைத்து இருக்கிறார். விரைவில் பார்த்திபனும் இந்த படத்தில் ஆன்போர்ட் ஆகவும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.
VCU மீம்: இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி 68ல் நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி, வெங்கட் பிரபு படங்களில் நடித்து வரும் வைபவ், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் உள்ளிட்டோர் இணைந்துள்ள நிலையில், வெங்கட் பிரபுவின் சினிமாட்டிக் யூனிவர்ஸாக இந்த படம் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என வீடியோ மீம் ஒன்றை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











