Thalapathy 68: விஜய்யுடன் இணையும் மிரட்டல் கூட்டணி... தளபதி 68ல் காத்திருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
இதனைத் தொடர்ந்து தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். வெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்தப் படத்தில் மிரட்டலான கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 68ல் இணையும் மிரட்டல் கூட்டணி: விஜய் கேரியரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக லியோ உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கம், மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. விஜய்யுடன் இத்தனை முன்னணி நடிகர்கள் நடித்துள்ளது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. லியோ இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். முதன்முறையாக விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி இணையவிருப்பதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி 68 படத்தின் பூஜை செப்டம்பரில் நடைபெறும் எனவும், அக்டோபர் முதல் வாரத்தில் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யுடன் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்ற அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விஜய் ஜோடியாக ஜோதிகா நடிக்கலாம் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பிரியங்கா மோகனும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
இதனிடையே தளபதி 68ம் விஜய்க்கு மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகவுள்ளதாம். அதாவது இதில் பிரபுதேவா, மாதவன் இருவரும் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. விஜய்க்கு போக்கிரி படம் மூலம் ஹிட் கொடுத்தவர் பிரபுதேவா. அதேபோல், விஜய்யின் படங்களில் அவரது பாடல்களுக்கும் அதிகம் கோரியோகிராபி செய்துள்ளார். இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால், விஜய்யுடன் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டாராம் பிரபுதேவா.
அவரைத் தொடர்ந்து மாதவனும் தளபதி 68ல் நடிக்க கால்ஷீட் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விஜய் - மாதவன் காம்போ இதுவரை எந்த படங்களிலும் அமைந்ததே இல்லை. அதனால், இந்தக் கூட்டணியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமையும் என வெங்கட் பிரபு பிளான் செய்துள்ளாராம். லியோவைத் தொடர்ந்து தளபதி 68 படத்திலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் இணைவது ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











