Thalapathy 68: “பிரசாந்த் இறங்கி வந்து ஆகணும்..” தளபதி 68-க்கு பின்னால இப்படியொரு ஃபிளாஷ்பேக்கா?

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு, தளபதி 68 படத்துக்காக பிரசாந்த் இறங்கி வந்தே ஆக வேண்டும் என ஒரு ஃபிளாஷ்பேக் ஸ்டோரி கூறியுள்ளார்.

 Thalapathy 68: Prashanth will definitely act in Vijays Thalapathy 68

விஜய் நடித்துள்ள லியோ படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. லோகேஷ் இயக்கியுள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் வெளியாகும் முன்பே தளபதி 68 படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக மேக்கப் டெஸ்ட், பாடி ஸ்கேனிங் செய்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் விஜய். இதனிடையே இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, பிரபுதேவா, மாதவன், பிரியங்கா மோகன், சினேகா ஆகியோர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இவர்களுடன் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய், அஜித் அறிமுகமாகும் முன்பே கோலிவுட்டின் இளம் முன்னணி ஹீரோவாக கலக்கியவர் பிரசாந்த். அவரது வைகாசி பொறந்தாச்சு உள்ளிட்ட படங்களை தியேட்டரில் பார்த்து விசிலடித்து என்ஜாய் செய்துள்ளேன் என விஜய் ஒருமுறை கூறியிருந்தார். தற்போது ஃபீல்ட்அவுட் ஆகிவிட்ட பிரசாந்த், சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் காணப்படுகிறார். இந்நிலையில் தான் தளபதி 68ல் பிரசாந்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

ஆனால், பிரசாந்த் தரப்பில் இருந்து இன்னும் சம்மதம் சொன்னதாகத் தெரியவில்லை. இதுபற்றி சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு சில தகவல்களை கூறியுள்ளார். அதாவது தளபதி 68 படத்தில் பிரசாந்த் கண்டிப்பாக நடிப்பார். இதற்காக அவர் இறங்கி வந்துதான் ஆகவேண்டும் என்றுள்ளார். விஜய்க்கு முன்பே ஹீரோவாக கொடிகட்டி பறந்த பிரசாந்த், இப்போது வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால், தளபதி 68 வாய்ப்பை மிஸ் செய்யமாட்டர் எனக் கூறியுள்ளார்.

 Thalapathy 68: Prashanth will definitely act in Vijays Thalapathy 68

மேலும், பிரசாந்த் அப்பா தியாகராஜனுக்கு இதில் விருப்பம் இல்லையென்றாலும் அவரும் இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்வார். பிரசாந்த் நடிப்பில் ஹிட் அடித்த கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் கரணின் கேரக்டரும் நடிப்பும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் வெளியானபோது பிரசாந்தை விடவும் கரணின் நடிப்பை தான் தியாகராஜன் பாராட்டினார். அதனால் தளபதி 68ல் பிரசாந்த் நடிப்பது உறுதியாகிவிடும் என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

தளபதி 68 படத்தில் பிரசாந்துக்கு மிக முக்கியமான கேரக்டர் என்றும், இது கண்டிப்பாக அவரது கேரியரில் பெரிய கம்பேக் கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X