Thalapathy 68: தளபதி 68-ல் இணைந்த ‘படையப்பா’ பிரபலம்... விஜய்க்கு டஃப் கொடுக்க இவங்க போதுமே!
சென்னை: விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. தற்போது பிரேக் விடப்பட்டுள்ள நிலையில், ஜனவரி முதல் வாரம் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பெரிய நட்ச்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. தற்போது மேலும் முன்னணி நடிகையும் தளபதி 68ல் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தளபதி 68ல் இணைந்த படையப்பா பிரபலம்
விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சென்னை, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் என பல இடங்களில் தளபதி 68 ஷூட்டிங் நடைபெற்றது. கடைசியாக ஹைதராபாத்தில் நடந்த தளபதி 68 ஷூட்டிங் இரு தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் மீண்டும் தொடர படக்குழு முடிவு செய்துள்ளது. அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் விஜய். அவருடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், யோகி பாபு, கிச்சா சுதீப், மீனாட்சி செளத்ரி, இவானா, க்ருத்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
வாரிசு, லியோ படங்களைத் தொடர்ந்து மீண்டும் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் சப்ஜெக்ட்டில் நடிக்கிறார் விஜய். இதனால் தளபதி 68 படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இந்தக் கூட்டணியில் ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளாராம். இதனை ரம்யா கிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தளபதி 68 படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி, விஜய், வெங்கட் பிரபு இருவருக்கும் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தளபதி 68 படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. படையப்பா திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த ரம்யா கிருஷ்ணன், அதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது விஜய்யுடன் அவர் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனிடையே தளபதி 68 அப்டேட்கள் நியூ இயர் ஸ்பெஷலாக டிச. 31ம் தேதி மாலை வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதன்படி தளபதி 68 டைட்டில், விஜய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாம். இந்தப் படத்திற்கு Goat - Greatest of all Time என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இந்த தகவல்களை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.


Click it and Unblock the Notifications











