Thalapathy 68: தளபதி 68ல் வெள்ளிவிழா நாயகன்... விஜய்க்காக இணைந்த மெர்சல் கூட்டணி... இனி சம்பவம்தான்
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இந்த மாதம் 19ம் தேதி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. லியோ வெளியாகும் முன்பே தனது 68வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் விஜய்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தளபதி 68ல் விஜய்யுடன் நடிக்கவுள்ள மெகா கூட்டணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 68ல் இணைந்த மெகா கூட்டணி : விஜய் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் லியோ. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது. அதற்கு முன்னதாகவே தனது 68வது படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்திற்கு, தற்போதைக்கு 'தளபதி 68' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தளபதி 68, ஷூட்டிங் தொடங்கும் முன்பே ப்ரீ ரிலீஸில் மாஸ் காட்டியது.
பிரம்மாண்டமாக உருவாகவுள்ள தளபதி 68 படத்தில், அப்பா - மகன் என இரட்டை பாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம் விஜய். இதற்கான மேக்கப் & பாடி ஸ்கேனிங் டெஸ்ட் எடுப்பதற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பினார் விஜய். இந்நிலையில், தளபதி 68 படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தளபதி 68 ஷூட்டிங் இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, ராஜூ சுந்தரம் கோரியோகிராபி செய்ய, தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டதாம். இந்தப் பாடல் யுவன் இசையில் தர லோக்கலாக உருவாகியுள்ளதாம். இதனிடையே தளபதி 68ல் விஜய்யுடன் இணைந்துள்ள நட்சத்திரக் கூட்டணி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அரவிந்த் சாமி, பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் லீட் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இவர்களுடன் தற்போது வெள்ளிவிழா நாயகன் மைக் மோகனும் தளபதி 68ல் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 90களில் பல சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்துள்ள மோகன், தளபதி 68ல் வில்லன் அவதாரம் எடுக்கலாம் எனத் தெரிகிறது. அதேபோல், சினேகா, வைபவ், மீனாட்சி செளத்ரி, ஜெய், அபர்ணாதாஸ் ஆகியோரும் தளபதி 68ல் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
தளபதி 68 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளிலும் நடத்த பிளான் செய்துள்ளதாம் படக்குழு. இரண்டு அல்லது மூன்றே ஷெட்யூல்களில் தளபதி 68 படப்பிடிப்பை முடித்துவிட்டு, 2024 சம்மர் அல்லது தீபாவளியில் படத்தை வெளியிடவுள்ளார்களாம். அதேபோல் விரைவில் தளபதி 68 டைட்டில் அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











