Thalapathy 68: ஒரே பேட்டியில் தளபதி 68 முழு கதையும் சொல்லணுமா?.. நடிகர் மோகனின் தக் லைஃப் ரிப்ளை!
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தில் புதுவிதமான காஸ்டிங் இணைந்துள்ளது. அந்த படத்தில் நடிகர் மைக் மோகன் தான் வில்லன் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சமீபத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அனைவரையும் மிரள விடும்படி தக் லைஃப் பதில்களை கூறி தெறிக்கவிட்டுள்ளார்.
வாரிசு படத்தில் சரத்குமார், ஷியாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா என வித்தியாசமான காஸ்டிங்குடன் நடித்த நடிகர் விஜய் லியோ படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, மடோனா செபாஸ்டியன் உடன் நடித்திருந்தார்.

தொடர்ந்து தனது படங்களில் மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் விஜய் தளபதி 68 படத்தின் காஸ்டிங்கையும் வித்தியாசமானதாகவே உருவாக்கி உள்ளார்.
தளபதி 68 நடிகர்கள்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68ல் விஜய் நடித்து வரும் நிலையில், அவருடன் வெள்ளி விழா நாயகன் நடிகர் மோகன் இணைந்துள்ளார். மேலும், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல், மீனாக்ஷி சவுத்ரி என காஸ்டிங்கே கலர்ஃபுல்லாக வித்தியாசமாக உள்ளது.
வில்லனாக மோகன்: நூறாவது நாள் உள்ளிட்ட ஆரம்பகால படங்களிலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்து தெறிக்கவிட்ட நடிகர் மோகன் நடிகர் விஜய்க்கு வில்லனாக தளபதி 68ல் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவரிடம் செய்தியாளர்கள் வில்லனாக நடிப்பதை எப்படி பார்க்கிறீங்க என கேட்டதும், என்னோட ஆரம்ப கால படங்களை எல்லாம் நீங்கள் பார்க்கவில்லை என்று தான் தெரிகிறது என்றார்.
முழு கதையும் தெரிஞ்சிக்கணும்: மேலும், தளபதி 68 படத்தின் சண்டைக் காட்சிகள் எப்படி வந்திருக்கு என்கிற கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் எழுப்ப, ஒரே பேட்டியில் ஒட்டுமொத்த தளபதி 68 படத்தின் கதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என நக்கலாக சிரித்து விட்டு தக் லைஃப் பதில் சொல்லி விட்டு புறப்பட்ட காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
நடிகர் மோகன் ஹரா எனும் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க உள்ள நிலையில், விஜய் படத்திலும் நடித்து வருவது கூடுதல் சிறப்பு. செல்வராகவன் சாணிக் காயிதம் படத்தில் முதலில் நடித்திருந்தாலும் அவர் பீஸ்ட் படத்தில் தான் அறிமுகமாகியிருந்தார். மோகனுக்கும் விஜய் படம் கம்பேக் கொடுக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











