Thalapathy 68: சிம்ரனா, சினேகாவா.. நீளும் லிஸ்ட்.. தளபதி 68 படத்தில் டைம் மெஷின் கான்செப்ட்டா?

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு வெல்கம் டு தி ஃபியூச்சர் என போட்ட தளபதி விஜய்யின் போஸ்ட் சோஷியல் மீடியா முழுவதும் தீயாக டிரெண்டாகி வருகிறது. அடுத்தக்கட்ட உச்சத்துக்கு தமிழ் சினிமா அசால்ட்டாக பயணிக்க முடிவு செய்து விட்டது என பலரும் கருதி வருகின்றனர்.

இந்நிலையில், தளபதி 68 படத்தில் இருந்து ஜோதிகா விலகி விட்டார் என்றும் சிம்ரனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சிம்ரன் இல்லை வசீகரா படத்தில் விஜய்யுடன் நடித்த சினேகா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Thalapathy 68 story plot with Time Machine concept buzz trending

மேலும், மாநாடு ஹிட் கொடுத்த நிலையில், தான் மீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையவே விஜய் சம்மதித்தார் என்றும் தளபதி 68 படத்தில் டைம் மெஷின் கான்செப்ட் ஒன்றும் இருக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தளபதி 68ல் ஃபோகஸ்: நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்த வருகிறார். லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அடுத்த படமான தளபதி 68 படத்துக்கான வேலைகளில் நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் அமெரிக்காவில் அந்தப் படத்திற்கான டீஏஜிங் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

சினேகா ஹீரோயினா: தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், ஜோதிகா நடிக்க வாய்ப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. ஜோதிகாவுக்கு பதிலாக அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சிம்ரனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அந்த படத்தில் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா படத்தில் நடித்த நடிகை சினேகா நடிப்பார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளன.

டைம் மெஷின்: மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என டபுள் ஆக்சன் ரோலில் நடிக்க உள்ளதாகவும் ஒரு கேரக்டர் வில்லனாகவும் இன்னொரு கேரக்டர் ஹீரோவாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. வில்லனாக மாறிய தனது மகனை திருத்துவதற்காக டைம் டிராவல் விஷயத்தை அப்பா விஜய் கையில் எடுப்பார் எனக் கூறுகின்றனர்.

இப்படி சோஷியல் மீடியாவில் வலம் வரும் தளபதி 68 படத்தின் கதையை பார்த்தால், இந்தியன் படத்தையும் சமீபத்தில் வந்த ஜெயிலர் படத்துடன் மாநாடு படத்தை மிக்ஸ் செய்து விட்டாரோ வெங்கட் பிரபு என்றே எண்ணத் தூண்டுகிறது.

ஏகப்பட்ட உருட்டுகள்: கண்டிப்பாக வெங்கட் பிரபு தளபதி 68 படத்தை வித்தியாசமான ஒரு படைப்பாக கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். முன்னதாக பேட்டி ஒன்றில் பேசும் போது வெங்கட் பிரபு ஏலியன் பூமிக்கு வந்து ஒருவரை கடத்திக் கொண்டு வேற்று கிரகம் போய் விட, அங்கே சென்று அந்த ஹீரோ அதகளம் பண்ணினால் எப்படி இருக்கும் என்றெல்லாம் கதை யோசித்து இருக்கேன். ஆனால், அதையெல்லாம் இங்கே எடுப்பதற்கான பட்ஜெட் இல்லை என பேசியுள்ளார்.

அப்படி ஏதாவது சையின்ஸ் ஃபிக்‌ஷன் படமாகத்தான் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மங்காத்தா மற்றும் மாநாடு படங்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு தளபதி 68 தரமாக வரும் என்கிற உறுதியுடன் உழைத்து வருகிறார் வெங்கட் பிரபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X