Thalapathy 68: தளபதி 68 ஸ்பாட்டில் ஆல் ஸ்டார்ஸ் ஆஜர்... விஜய் அடிக்கும் லூட்டியில் திணறும் படக்குழு

சென்னை: விஜய் தற்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரம்மாண்ட நட்சத்திரக் கூட்டணியும் இணைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது சென்னையில் தொடங்கிய தளபதி 68 படப்பிடிப்பில் விஜய்யுடன் அனைவரும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Thalapathy 68: Thalapathy 68 Chennai Schedule starts with Vijay and All-Stars

தளபதி 68 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் லூட்டி: விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தளபதி 68 என்ற டைட்டில் உருவாகும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, பிரேம்ஜி, யோகி பாபு என பெரிய நட்சத்திரக் கூட்டணியே இணைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

லியோ ரிலீஸுக்கு முன்பே தளபதி 68 ஷூட்டிங் சென்னையில் தொடங்கிவிட்டது. முதலில் ஒரு பாடலை மட்டும் ஷூட் செய்த படக்குழு, அடுத்து தாய்லாந்து பறந்தது. அங்கு விஜய் பங்கேற்ற மிரட்டலான கார் சேஷிங் போர்ஷன் படமாக்கப்பட்டதாம். அதனை முடித்துவிட்டு விஜய் மட்டும் முதலில் சென்னை திரும்பினார். இதனையடுத்து வெங்கட் பிரபு உள்ளிட்ட மொத்த படக்குழுவும் சென்னைக்கு ரிட்டர்ன் ஆனது.

இந்நிலையில், தளபதி 68 ஷூட்டிங் சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது. ஸ்ரீ கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெறும் இந்தப் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றுள்ளார். அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சினேகா, மீனாட்சி, யோகி பாபு, பிரேம்ஜி என தளபதி 68 படத்தில் நடிக்கும் மொத்த நட்சத்திரங்களையும் களமிறக்கியுள்ளாராம் வெங்கட் பிரபு.

5 நாட்கள் வரை நடைபெறும் இந்த ஷெட்யூலில், விஜய்யுடன் மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை ஷூட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் தளபதி 68 ஷூட்டிங் ஸ்பாட்டே செம்ம ஜாலி மோடுக்கு மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கட் பிரபுவே தனது படங்களில் செம்ம ஜாலியாக தான் வேலை பார்ப்பார். இதில் விஜய்யும் இணைந்தால் கேட்கவே வேண்டாம்.

அதேபோல், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம்ம ஃபன் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. தளபதி 68 டீம் மொத்தமாக ஒன்றுகூடியுள்ளதால், சில நேரங்களில் வெங்கட் பிரபுவே தடுமாறிவிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் சென்னை ஷெட்யூல் முடிந்ததும் பிரேக் இல்லாமல் உடனடியாக அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X