Thalapathy 68: ஹாலிவுட் ரீமேக்கா தளபதி 68... லோகேஷ் ரூட்டில் வெங்கட் பிரபு... விஜய் ரியாக்‌ஷன்..?

சென்னை: விஜய்யின் தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 31ம் தேதி மாலை வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் ஹாலிவுட்டில் இருந்து ரீமேக் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 68 ஸ்டோரி லைன் இதுதானா?
விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 31ம் தேதி மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செகண்ட் லுக் போஸ்டர், படத்தின் டைட்டில் ஆகியவையும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 Thalapathy 68: Thalapathy 68 Storyline As It Is Being Adapted From Gemini Man Hollywood film

தளபதி 68 படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அதேபோல் இது சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அதன்பின்னர் வெளியான தகவல்களின் படி தளபதி 68 கமர்சியல் மூவி தான் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது மீண்டும் தளபதி 68 கதை குறித்து சில அப்டேட்கள் கிடைத்துள்ளன.

அதன்படி விஜய்யின் தளபதி 68 சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் விஜய் இரண்டு அல்லது மூன்று கேரக்டர்களில் நடிக்கலாம் எனவும் தெரிகிறது. அதாவது தளபதி 68 படத்தின் ஒன்லைன் ஸ்டோரி, ஹாலிவுட்டில் வெற்றிப் பெற்ற ஜெமினி மேன் படத்தின் தழுவல் எனக் கூறப்படுகிறது. வில் ஸ்மித் நடித்திருந்த ஜெமினி மேன், சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஆக்‌ஷன் மூவியாக உருவாகி இருந்தது.

அந்த கதையை அப்படியே கொஞ்சம் பட்டி, டிங்கரிங் செய்து, கோலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றபடி ரீமேக் செய்யப்படுகிறதாம். ஆனால், விஜய்யின் ஆக்‌ஷன் சீன்ஸ் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் வகையில் இருக்கும் என சொல்லப்படுகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோவும் ஹாலிவுட்டில் வெளியான A History of Violence படத்தை தழுவியே எடுக்கப்பட்டிருந்தது. முதலில் இந்த தகவலை லியோ படக்குழு மறுத்திருந்தது.

ஆனால், படம் வெளியாகும் போது A History of Violence படக்குழுவுக்கு நன்றி தெரிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இப்போது தளபதி 68 படமும் அதேபோல் ஹாலிவுட்டில் இருந்தே ரீமேக் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதுபற்றி படக்குழுவினர் இதுவரை எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. முன்னதாக தளபதி 68 படத்தின் டைட்டில் பாஸ் அல்லது பஸ்ஸில் என வைரலானது. அதற்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி 68 படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, இவானா, அஜ்மல், மாளவிகா ஷர்மா, யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் கன்னட மாஸ் ஹீரோ கிச்சா சுதீப்பும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X